For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமான 'பீட்டா' அமைப்பின் தூதரா? நடிகர் தனுஷ் விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கக் காரணமாக இருந்த பீட்டா எனும் விலங்குகள் நல அமைப்பின் தூதராக தாம் செயல்படுவதாக வெளியான செய்திகளை நடிகர் தனுஷ் மறுத்துள்ளார். பீட்டா அமைப்பிடம் இருந்து விருதுதான் வாங்கியுள்ளேன்; ஜல்லிக்கட்டுக்கு நடத்த வேண்டும் என்பதை நான் ஆதரிக்கிறேன் என்றும் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு காரணமே விலங்குகள் நல அமைப்பான பீட்டாதான்.

வதந்தி

வதந்தி

இந்த நிலையில் பீட்டாவின் தூதர் நடிகர் தனுஷ்தான்; அவர் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார் என சிலர் சமூக வலைதளங்களில் கொளுத்திப் போட்டனர்... விடுவார்களாக வலைவாசிகள்.. கொந்தளித்து போய்விட்டனர்.

பீட்டா தூதர் அல்ல

இந்நிலையில் நடிகர் தனுஷ் தமது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் இது குறித்து இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், பீட்டா அமைப்பின் தூதர் நான் அல்ல; அந்த அமைப்பிடம் இருந்து சைவப் பிரியர் என்பதற்காக விருது மட்டும் வாங்கி இருக்கிறேன்;

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு இல்லை

ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதை நான் ஆதரிக்கிறேன்.

வதந்திகளை நம்பாதீர்

வதந்திகளை நம்பாதீர்

ஜல்லிக்கட்டுக்கு நான் எதிராக கருத்து கூறியதாக வதந்தி பரப்பப்படுவதை நம்ப வேண்டாம். அனைவருக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்துகள் என அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Dhanush has clarified that he is not a brand ambassador of People for Ethical Treatment of Animals (PETA) and said that he supports the traditional bull-taming sport Jallikattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X