For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக மீதான வைகோவின் குற்றச்சாட்டில் எனக்கும் உடன்பாடு உண்டு: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பாஜவுக்கு எதிரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றில் தனக்கும் உடன்பாடு உள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி மாநிலம் முழுவதும் இன்று பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.

I too agree with Vaiko: Says Ramadoss

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மதிமுக உயர் நிலைக் குழு கூடி முடிவு செய்தது அவர்களின் உட்கட்சி விவகாரம். அவர்களுக்கு சரி என்று தோன்றியதை செய்துள்ளனர். பாஜகவுக்கு எதிராக வைகோ தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளில் சிலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. நானும் பலமுறை விமர்சித்து வருகிறேன். பிரதமர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. விமர்சிப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை.

திமுக கூட்டணியில் பாமக இருக்கையிலே நான் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளேன். தவறான முடிவு எடுக்கப்படுகிறது என்றால் கூட்டணி கட்சியானாலும் கடுமையாக விமர்சிப்பேன். ஆனால் அதே சமயம் எனது விமர்சனம் நாகரீகமானதாக இருக்கும் என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி, ராமதாஸ் அளித்த பதில் விவரம் வருமாறு,

கேள்வி: வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி தலைமையில் தான் கூட்டணி, எங்கள் கட்சிக்காரர் தான் முதல்வர் வேட்பாளர் என்கிறீர்களே, இதை பாஜக ஏற்குமா?

பதில்: போகப் போக தெரியும்

கேள்வி: உங்களை பற்றி சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்கிறாரே?

பதில்: பாஜகவினர் அடக்கத்தோடு பேச வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது பாஜகவில் உள்ள சாமிக்கும் பொருந்தும். இது போன்ற கருத்துகளை தெரிவித்து அவர் சர்ச்சையில் சிக்குவது உண்டு. அவரது கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க விருப்பம் இல்லை என்றார் ராமதாஸ்.

English summary
PMK founder Dr. Ramadoss told that he too agrees with MDMK chief Vaiko's allegations against BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X