எனது விருப்பத்தின்பேரில்தான் பிக்பாசிலிருந்து வெளியேறுகிறேன்.. ஓவியா உருக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது விருப்பத்தின் பேரில் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினேன் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்றதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ஓவியா வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசனிடம் ரசிகர்கள் முன்னிலையில் ஓவியா கலந்துரையாடினார்.

அப்போது எனது விருப்பத்தின் பேரில்தான் வெளியேறினேன் என அவர் கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த ரசிகர்கள் கமல் முன்னிலையிலேயே ஓவியாவை உள்ளே போகும்படிக் கூறி கத்தினர். ஆனால் ஓவியாவோ, தனது விருப்பத்தின்பேரில்தான் வெளியேறுவதாக கூறினார். மேலும், தன்மீது அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய விரும்புவதாக உருக்கமாக அவர் கூறினார்.

ஜூலியால் ஒதுக்கப்பட்ட ஓவியா

ஜூலியால் ஒதுக்கப்பட்ட ஓவியா

பிக்பாஸ் குடும்பத்தில் பங்கேற்றுள்ள சக போட்டியாளர்களான காயத்ரி, ஜூலி, ஷக்தி, ரைசா ஆகியோர் ஓவியாவை ஓரங்கட்டி வைத்திருந்தனர். ஜூலி ஓவியா மீது இல்லாததை கூறி சக குடும்பத்தினர் அவரை வெறுக்கும் படி செய்தார்.

எதிரியாகவே பார்த்த ஜூலி

எதிரியாகவே பார்த்த ஜூலி

மேலும் வேண்டும் என்றே சிவப்பு கம்பளம் விரிக்கக்கோரி ஓவியாவை அவமானப்படுத்தினார் ஜூலி. ஜூலி எப்போதும் ஓவியாவை எதிரியாகவே பார்த்து வந்தார்.

அடிக்க பாய்ந்த ஷக்தி

அடிக்க பாய்ந்த ஷக்தி

காயத்ரி தகாத வார்த்தைகளால் ஓவியாவை சரமாரியாக திட்டியுள்ளார். நடிகர் ஷக்தி ஓவியாவை அடிக்க கை ஓங்கிக்கொண்டு பாய்ந்தார். ரைசாவும் பல முறை ஓவியாவை அவமானப்படுத்தியுள்ளார். எந்த விளையாட்டாக இருந்தாலும் ஓவியாவை ஒதுக்கி வைத்தனர்.

நழுவிய ஆரவ்

நழுவிய ஆரவ்

நெருக்கமாக பழகிய ஆரவும் காதலிக்கவில்லை வெறும் நட்புதான் என ஓவியாவை ஓரம்கட்டினார். ஒட்டுமொத்த பிரச்சனையாலும் விரக்தியடைந்த ஓவியா தற்கொலைக்கு முயன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

யாரும் காரணமல்ல

யாரும் காரணமல்ல

ஆனால் அப்போதும் மற்றவர்களை குற்றம்சாட்டாமல் தனது விருப்பத்தின் பேரிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறினார். இதனிடையே ஓவியாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பக்கோரி ரசிகர்கள் சோஷியல் மீடியாவிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Oviya said to actor Kamal haasan that she walked out from biggboss house with her own decision. But Fans urging her to go inside.