கமலின் அரசியல் கருத்துக்களை புரிந்துகொள்ள காலஅவகாசம் தேவை- பொன். ராதாகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: நடிகர் கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களை புரிந்துகொள்ள எனக்கு காலஅவகாசம் தேவை என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கமலின் ஊழல் குறித்த பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்துள்ளார்.

கமலின் டுவிட்டுகள், கருத்துக்களுக்கு பாஜக தமிழக தலைவர்கள், காட்டமான கருத்துக்களை கூறி வருகின்றன. எச். ராஜா ஒருமையில் பேசியதோடு முதுகெலும்பில்லாதவர் கமல் என்றெல்லாம் கூறி வசைபாடினார். அதற்கு எலும்பு டாக்டர் எச். ராஜா என்று பதிலடி கொடுத்தார் கமல்ஹாசன்.

I want sometime to understand kamal's statement says Pon.Radhakrishnan

இதனிடையே கமலின் அரசியல் கருத்து குறித்து மதுரை வந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நடிகர் கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களை புரிந்துகொள்ள எனக்கு காலஅவகாசம் தேவை என்றார்.

ஊழல் குறித்த நடிகர் கமல்ஹாசனின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார். மேலும் வரும் 27ஆம் தேதி அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

H Raja slammed Actor Kamal-Oneindia Tamil

கமலின் கருத்துக்களை புரிந்து கொள்ள மத்திய அமைச்சருக்கே கால அவகாசம் தேவையென்றால் பாமர மக்களின் பாடு பாவம்தான் போல.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pon.Radhakrishnan told that Kamal's corruption allegation statement his own report. Kamal Haasan had tweeted a tacit, politically loaded message to look out for a key announcement.
Please Wait while comments are loading...