விஜய் அரசியலுக்கு வரட்டும்.. வரவேற்பேன்.. கமல்ஹாசன் சப்போர்ட்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் சர்க்கார் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தேர்தல்ல எல்லோரும் போட்டியிட்டு சர்க்கார் அமைப்பாங்க, நாங்க சர்க்கார் அமைத்துவிட்டு தேர்தல்ல நிக்க போறோம் என்று அரசியல் சம்பந்தமாக காரசாரமாக பேசினார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் பேட்டி அளித்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர் விஜயின் அரசியல் பேச்சு குறித்தும் கருத்தும் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை
அவர் தனது பேட்டியில் முதலில் ஸ்டெர்லைட் குறித்து பேசினார். அதில், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மத்திய குழுவிடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளிக்கப்படவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே எங்கள் முடிவு. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலை யாருக்கும் தேவை கிடையாது.

பெட்ரோல் விலை
பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது. சொல்ல தேவையில்லை. அரசு வரிசையாக பெட்ரோல் விலையை ஏற்றியது. அதன்பின் பெட்ரோல் விலையை வேகமாக ஏற்றியது. இப்போது மிகவும் குறைவாக குறைத்துள்ளது. பெட்ரோல் விலையை இன்னும் குறைக்க வேண்டும்.

விஜய் அரசியல்
விஜயின் அரசியல் பேச்சு நன்றாக இருந்தது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஊழல் பிரச்சனை
இந்தியாவின் பிரச்சனை ஊழல்தான். ஊழலை ஒழிப்பதுதான் இங்கு கடினம். விஜய் ஊழலுக்கு எதிராக பேசியுள்ளார். விஜய் அப்படி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி











Click it and Unblock the Notifications