18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால், ரஜினி கட்சி போட்டியிடுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகள் இவைதான்!- வீடியோ

  சென்னை: தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரு வேளை இடைத் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தால் அதில் ரஜினி கட்சி போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  அதிமுகவின் இரு அணிகள் இணைந்ததில் அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்கள் தனித்து செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் முதல்வருக்கு மீது நம்பிக்கை இல்லை என்று பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாக மனு அளித்தனர்.

  அதிமுகவின் தலைமை கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறி 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் அது தொடர்பாக 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

  நீதிபதி உத்தரவு

  நீதிபதி உத்தரவு

  இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது. காலியானதாக அறிவிக்கக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது.

  தனிக்கட்சி

  தனிக்கட்சி

  ஒரு வேளை இதற்கு இடைத் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதித்தால் ரஜினி கட்சி போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஜினிகாந்த் கடந்த 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். மேலும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு குறுகிய காலம் இருப்பதால் போட்டியிட வில்லை என்றும் சட்டபேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

  18 தொகுதிகளில்...

  18 தொகுதிகளில்...

  ரஜினி தனது கட்சி, சின்னம், பெயர் ஆகியவற்றை தை முதல் நாளன்று அறிவிக்கவுள்ள நிலையில் , இந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதில் அவரது கட்சி போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  18 தொகுதிகள்தானே

  18 தொகுதிகள்தானே

  தனித்து போட்டி என்று ரஜினி அறிவித்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் என்கிற போது அதில் ஏராளமான வார்டு, நகராட்சி, மாநகராட்சி என ஏராளமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டியிருக்கும். அதனால் அதில் தற்போது போட்டியிட முடியாது. ஆனால் இடைத்தேர்தல் என்பது 18 தொகுதிகளுக்கு மட்டுமே நடத்தப்படுவது. இதில் ரஜினி தனது ஆதரவாளர்களுடன் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லை பொது தேர்தலில் மட்டுமே போட்டி என்றிருப்பாரா.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  18 Assembly constituencies of TN for which the MLAs are disqaulified, now declared as vacant. If byelection conducts for 18 constituencies, Rajini's political party will contest?.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற