For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ஒரு நதியை இணைச்சா.. 100 நதியை இணைச்ச மாதிரி.. ரஜினி அரசியலுக்கு வந்தா இப்படிதான் பேசுவாரோ!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் தனது ஸ்பெஷாலிட்டியான பஞ்சு டயலாக்குகளை பேசுவாரா என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பஞ்சு டயலாக்குகளாலேயே தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது ஒவ்வொரு படமும் தனித்துவமான பஞ்ச் டயலாக்குகளாலேயே வெற்றி பெற்றது என்றால் மிகையாகாது.

தனது பிரத்தியோக ஸ்டைலாலும் பஞ்ச் டயலாக்குகளாலும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ரஜினி 5 நாட்களாக ரசிகர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார். முதல் நாள் தொடக்க விழாவில் பொத்தாம் பொதுவாக பேசிய ரஜினி, இன்று கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே சில கருத்துக்களை வைத்தார்.

இதன் மூலம் அவர் ஏதோ ஒரு முடிவுடன்தான் உள்ளார் என அனுமானிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு வேளை ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் பஞ்ச் டயலாக்குகளை பேசுவாரா? பேசினால் எப்படி இருக்கும் என ஒரு கற்பனை..

ஒரு திட்டம் போட்டா

ஒரு திட்டம் போட்டா

நான் ஒரு திட்டம் போட்டா 100 திட்டத்துக்கு சமம்! ( நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்னா மாதிரி.. பாட்ஷா படத்தில் இடம்பெற்ற பஞ்ச் டயலாக். பட்டிதொட்டி எங்கும் பரவியது. ஒரு நதியை இணைச்சா 100 நதியை இணைச்ச மாதிரின்னும் கூட பேசலாம்).

என் வழி தனி வழி

என் வழி தனி வழி

என் அரசு... தனி அரசு..!
(என் வழி தனி வழி - படையப்பா படத்தில் வந்த புகழ்பெற்ற பஞ்ச் டயலாக் இதுவாகும்..

நீக்கிடுவேன்..!
(அமைச்சர்களை எச்சரிக்கை இப்படிச் சொல்லலாம். சீவிடுவேன் என்று பதினாறு வயதினிலே படத்தில் இடம் பெற்ற ரஜினியின் பஞ்ச் டயலாக் இது)

கொஞ்சமா கொடுப்பேன்

கொஞ்சமா கொடுப்பேன்

எதிர்க்கட்சிகாரங்க நிறைய வாக்குறுதி கொடுப்பாங்க. ஆனா கை விட்ருவாங்க... நான் கொஞ்சமா சொல்லுவேன், ஆனா கைவிட மாட்டேன்.! (கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கைவிட்ருவான்.. நல்லவங்களை நிறைய சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் என்ற பாட்ஷா பட வசனத்தை பிரசாரத்துக்கு இப்படி மாற்றிப் பேசலாம்.)

அரசுடா.. தமிழக அரசுடா!

அரசுடா.. தமிழக அரசுடா!

அரசு தமிழக அரசு..!
(மல அண்ணா மல என்ற அண்ணாமலை படத்தில் இடம் பெற்ற வெயிட்டான பஞ்ச் இது)

எந்த திட்டமா இருந்தாலும்

எந்த திட்டமா இருந்தாலும்

எந்த திட்டமா இருந்தாலும் என் மனசுக்கு பிடிச்சாதான் அறிவிப்பேன்..! (எந்த வேலையா இருந்தாலும் என் மனசுக்கு பிடிச்சாதான் செய்வேன் என்ற லிங்கா பட வசனம் இது.)

அதிகமா ஆசைப்படுற ஆளுங்கட்சியும்

அதிகமா ஆசைப்படுற ஆளுங்கட்சியும்

(அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமாக கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல என்ற படையப்பா படத்தில் இடம்பெற்ற மற்றுமொரு புகழ்பெற்ற டயலாக்).

கூட்டி கழிச்சுப்பாரு..

கூட்டி கழிச்சுப்பாரு..

நான் எப்ப தமிழ்நாட்டுக்கு வந்தேன், என்ன பண்ணேன், நீங்க என்ன எப்படி வாழ வச்சிங்க, எப்படியெல்லாம் வாய்ஸ் கொடுத்தேன், இனிமே என்ன பண்ண போறேன்.. எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்.! (கூட்டி கழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும் என்ற அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற டயலாக்..!

ஹவ் இஸ் இட்!

ஹவ் இஸ் இட்!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... (இது படையப்பா பட வசனம்தான்)... அமைச்சரவைக் கூட்டத்தின்போது ரஜினி பேசி முடித்ததும் ஹவ் இஸ் இட் என்று கேட்பார்.. அதற்கு அமைச்சர்கள் சூப்பர் என்று சொல்லி குதூகலப்படலாம்!

English summary
If Rajinikanth comes to politics will he speak punch dialogues. If he speaks, how it will be? just a imagination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X