காளீஸ்வரி குரூப் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி ரெய்டு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல எண்ணெய் நிறுவனமான காளீஸ்வரி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 54 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தும் சோதனை காலம் இது என்ற மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தைப் பற்றி குறிப்பிடும்படி நாளொரு சோதனையை வருமான வரித்துறையினர் நடத்தி வருகின்றனர்.

 Income Tax Raid in Kaleeswari oil refinery firm

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை அடுத்து தற்போது தொழில் நிறுவனங்களிலும் ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 54 இடங்களில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர்.

காளீஸ்வரி நிறுவனம் 1993ல் ஆரம்பிக்கப்பட்டு, இன்று பல வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்துவருகிறது.உள்நாட்டு சந்தையிலும் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாத காரணத்தால் இங்கு சோதனை மேற்கொண்டதாக விளக்கமளித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kaleewari a leading oil refinery company raided from this morning and sources said improper IT submission is the cause for the raid.
Please Wait while comments are loading...