For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்பிஐ வங்கியில் ரூ.90 கோடி ஸ்வாஹா.. நீரவ் மோடி பாணியில் மோசடி செய்த விருதுநகர் "இந்துமதி"!

விருதுநகரை சேர்ந்த இந்துமதி ரிபைனரி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம், மிகவும் நூதனமாக மோசடி செய்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணம் பெற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    எஸ்.பி.ஐ. வங்கியில் 90 கோடி மோசடி செய்த இந்துமதி நிறுவனம்- வீடியோ

    சென்னை: விருதுநகரை சேர்ந்த இந்துமதி ரிபைனரி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம், மிகவும் நூதனமாக மோசடி செய்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணம் பெற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்துமதி ரிபைனரி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம், போலி ஆவணங்களை பாரத ஸ்டேட் வங்கியில் அளித்து ரூ. 87.36 கோடி அளவுக்கு கடன் பெற்றுள்ளது. இதையடுத்து எஸ்பிஐ வங்கி சிபிஐயிடம் புகார் அளித்திருந்தது.

    இந்த மோசடி குறித்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

     சோதனை நடத்தினர்

    சோதனை நடத்தினர்

    இதனால் இந்துமதி ரிபைனரி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ரூ. 90 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தமிழகத்தில் 9 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.கோவை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்துமதி ரிபைனரி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    நீரவ் மோடி போலவே

    நீரவ் மோடி போலவே

    இந்த நிறுவனம் நீரவ் மோடியை போலவே மோசடி செய்தது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. நீரவ் மோடி வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், லோன் எடுக்க இந்தியாவில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் உத்தரவாத கடிதம் வாங்கி கொடுத்தார். இந்த கடனை நீரவ் மோடி அளிக்க வில்லை என்றால், பஞ்சாப் வங்கிதான் அளிக்க வேண்டும். இதே போல தான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் உத்தரவாத கடிதம் வாங்கி மோசடி செய்துள்ளது இந்துமதி நிறுவனம்.

    பொய்யான பத்திரம்

    பொய்யான பத்திரம்

    இவர்கள் இந்த வங்கி மூலம் லோன் பெற மொத்தம் 46 உத்தரவாத கடிதம் பெற்று இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் அளித்த ஆவணங்கள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானது என்று கூறப்படுகிறது. அதாவது பொய்யான ஆவணங்களில் நபர்களை உருவாக்கி பணம் இல்லாத வங்கி கணக்குகளை காட்டி, இவர்கள் உத்தரவாத கடிதம் பெற்று இருக்கிறார்கள்.

    எவ்வளவு மோசடி

    எவ்வளவு மோசடி

    இதை வைத்துதான் 87 கோடி ரூபாய் வரவு மோசடி செய்து இருக்கிறார்கள். மொத்தமாக வட்டி மற்றும் மற்ற செலவுகளையும் சேர்த்து 90 கோடி மோசடி செய்து இருப்பதாக, ஸ்டேட் வங்கி ஆப் இந்தியா தெரிவித்து உள்ளது. இதுகுறித்து இப்போதான் சிபிஐ அமைப்பு விசாரிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Indhumathi Refineries Private Limited uses Nirav Modi technique to cheat SBI.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X