போயஸ் கார்டன் என்றாலே இரட்டை விரல்தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆன்மீகத்திற்கும் அரசியலிற்கும் வேறுபாடு தெரியாதவரா ரஜினிகாந்த் ?- வீடியோ

  சென்னை: ஜெயலலிதாவுக்குப் பிறகு போயஸ்கார்டனில் மீண்டு இரட்டை விரல் அரசியல் தொடங்கியுள்ளது.

  தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் பலனின்றி உயிரிழந்ததாக அறிவித்தது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.

  தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. முக்கிய தேசிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

  அரசியலில் வெற்றிடம்

  அரசியலில் வெற்றிடம்

  அவரது மரணம் தமிழக அரசியலில் பேரிழப்பு என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் ஒரு பெரும் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

  ரஜினியால் மீண்டும்..

  ரஜினியால் மீண்டும்..

  ஜெயலலிதாவால் புகழ் பெற்ற போயஸ்கார்டன் அவர் மறைவுக்குப் பிறகு மெல்ல செய்திகளில் இருந்தும் மறைய தொடங்கியது. இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பிறகு போயஸ்கார்டன் மீண்டும் தமிழக அரசியலில் மீண்டும் இடம்பிடித்தது போயஸ்கார்டன்.

  இரட்டை விரலை காட்டிய ஜெ.

  இரட்டை விரலை காட்டிய ஜெ.

  போயஸ்கார்டன் வீட்டின் பால்கனியில் இருந்து தொண்டர்களை சந்திக்கும் ஜெயலலிதா எப்போதும் இரட்டை விரல்களையே காட்டுவார். அது கட்சியின் சின்னம் மற்றும் வெற்றியை குறிக்கும் ஆங்கில சொல் விக்டரியின் முதல் எழுத்தாக பார்க்கப்பட்டது.

  ரஜினியின் பாபா சின்னம்

  ரஜினியின் பாபா சின்னம்

  இந்நிலையில் ரஜினியும் தனது அரசியல் தொடர்பான வெப்சைட்டில் பாபா படத்தில் காண்பித்த பாபா சின்னத்தைதான் வைத்துள்ளார். ரசிகர்களை சந்தித்த போதும் மேடையில் இந்த சின்னத்தை வைத்திருந்தார் ரஜினி.

  இரட்டை விரலை காட்டுவாரா?

  இரட்டை விரலை காட்டுவாரா?

  இந்த சின்னத்தைதான் ரஜினி தனது கட்சி சின்னமாக அறிவிப்பார் என கூறப்படுகிறது. ஒருவேளை ரஜினி தனது கட்சி சின்னமாக பாபா சின்னத்தை அறிவித்தால் போயஸ்கார்டனில் அவரது தொண்டர்களை சந்திக்கும்போது அவரும் இரட்டை விரலைதான் காட்டுவார்.

  ஜெ. இடத்தை பிடிப்பாரா?

  ஜெ. இடத்தை பிடிப்பாரா?

  தேசிய அரசியல் வரை தவிர்க்க முடியாத தலைவராக இருந்தவர் ஜெயலலிதா. அப்படி ஒரு தலைவரை கொடுத்த போயஸ்கார்டன் தற்போது ரஜினியை அரசியலுக்கு கொடுத்துள்ளது. மேலும் ஜெயலலிதா பயன்படுத்தியது போன்ற இரட்டை விரல் சின்னத்தையும் கொடுத்துள்ளது. ஜெயலலிதாபோன்றே ரஜினியும் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்..

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Former Tamilnadu Chief minister Jayalalitha showed her two fingers when she meets her wokers. If Rajini announce the baba symbol as his party symbol then he also will show the double finger from Poes garden.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற