'உங்களை படிக்க வைத்து அழகு பார்த்த எம்.ஜி.ஆர் துரோகியா?'.. துரைமுருகனுக்கு ஓ.பி.எஸ் கேள்வி!
திருப்பத்தூர்: தன்னை படிக்க வைத்து அழகு பார்த்த எம்.ஜி.ஆரை துரைமுருகன் துரோகி என பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.ஜி.ஆரை நோக்கி துரோகி என்று கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு அ.தி.மு.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கண்டித்து அறிக்கை விட்டனர்.

மறைத்துவிட்டு பேசுகிறாரா
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.ஜி.ஆரை நோக்கி துரோகி என்று கூறுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். துரைமுருகன் தான் கடந்து வந்த பாதையை மறந்துவிட்டு பேசுகிறாரா அல்லது மறைத்துவிட்டு பேசுகிறாரா எனத் தெரியவில்லை. எம்.ஜி.ஆரை பொறுத்தவரை எந்தக்காலத்திலும் யாருக்கும் துரோகம் செய்தவர் இல்லை. ம்.ஜி.ஆரை நம்பி வாழ்ந்தவர்கள் உண்டே தவிர அவர் யாரை நம்பியும் வாழவில்லை என்றும் எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தவர்கள் காணாமல் போன வரலாறு துரைமுருகனுக்கு நன்கு தெரியும் என்று அவர்கள் கூறி இருந்தனர்.

ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் திருப்பத்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் துணை முதல்வரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி வீரமணி மற்றும் செங்கோட்டையன் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் மாவட்ட கழக சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

துரைமுருகனை படிக்க வைத்தவர்
அப்போது கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- துரைமுருகனை படிக்க வைத்து அழகு பார்த்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் திரைப்படங்களில் தத்துவ பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் உதயசூரியன் சின்னத்தை தலைப்பாகையில் கட்டி பொதுமக்கள் தெரிந்து கொள்ளும்படி தி.மு.க.வை வளர்த்து தி.மு.க ஆட்சி பிடிக்க முக்கிய பங்கு வகித்தவர் எம்ஜிஆர்.

இது நியாயமா?
அண்ணா மறைவிற்குப் பிறகு இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல்வர் போட்டியின்போது கருணாநிதியை முதலமைச்சர் ஆக்கியவர் எம்.ஜி.ஆர். எல்லாவற்றையும் உருவாக்கும் தலைவராகவும் மக்கள் மனதை ஆட்கொண்டு தனிப் பெரும் ஜோதியாக விளங்கியவர் அவர். அவரைப் பார்த்து துரைமுருகன் துரோகி என்று குறிப்பிட்டது எந்த விதத்தில் நியாயம்? என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications