• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே கொழப்பமா இருக்கே இவரு எந்த கட்சின்னு கண்டுபிடிங்க?

By Gajalakshmi
|

சென்னை : அதிமுக அரசின் திட்டத்திற்கு பிரதமரை அழைத்து தொடங்கி வைத்த தமிழக அரசின் செயல் எந்த அளவிற்கு வியப்பாக இருக்கிறதோ, அதே அளவிற்கு வியப்பாக இருக்கிறது தொண்டரின் இந்த புகைப்படம். தலையில் பாஜக தொப்பி கையில் அதிமுக கொடியுடன் நிற்கும் இவர் சொல்ல வருவது தான் தமிழகத்தில் அதிமுகவின் நிலையா என்றும் சிந்திக்க தோன்றுகிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பாஜக தான் அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்து இயக்குகிறது என்று பலராலும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு ஏற்றாற் போல தமிழக அமைச்சர்களும் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டால் தான் மாநில அரசுக்கு நிதியுதவிகள் கிடைக்கும் என்று சப்பைகட்டு பேச்சு பேசினர்.

ஆனால் ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு பாஜகவிற்கு சாதகமாக செயல்பட்டதாலேயே மக்களின் வெறுப்புக்கு ஆளானதகாவும், பாஜகவை எதிர்த்ததாலேயே தினகரன் வெற்றி பெற்றதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இனி பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும் அவர் பேசினார்.

இல்லாத வழக்கம்

இல்லாத வழக்கம்

இந்நிலையில் அதிமுக அரசின் தேர்தல் அறிவிப்பில் முக்கியமான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் தொடங்கி வைத்தார். பொதுவாக மத்திய மாநில அரசின் நிதி பங்கீட்டில் தொடங்கும் திட்டங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் பிரதிநிதிகளை அழைப்பது தமிழக முதல்வர்களின் வழக்கம்.

ஏன் பிரதமரை அழைத்தனர்?

ஏன் பிரதமரை அழைத்தனர்?

ஆனால் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியை பயன்படுத்தி செயல்படுத்தப்படும் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். தமிழக அரசின் திட்டத்திற்கு பிரதமரை அழைத்ததே சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெருமைபட்டு கொண்ட மோடி

பெருமைபட்டு கொண்ட மோடி

இதற்கு ஏற்றாற் போல விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஊறுகாய் போல ஜெயலலிதாவைப் பற்றியும், ஸ்கூட்டர் திட்டத்தையும் பேசினார். எஞ்சிய பேச்சு முழுவதிலும் மத்திய அரசின் திட்டங்களையே புகழ்ந்து தள்ளினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தமிழில் பேசியதோடு பிரதமருக்காக ஆங்கிலத்திலும் அதனை வாசித்துக் காட்டினார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் பிரதமர் வாய் திறக்கவே இல்லை.

பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக

பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக

அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகை தந்தது பாஜகவின் கையில் தான் இன்னும் அதிமுகவின் பிடி இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது. இதையே தான் அதிமுக, பாஜக தொண்டர்களும் நினைக்கிறார்கள் என்பதை இந்த தொண்டனின் புகைப்படம் உணர்த்துகிறது.

ஆமா இவரு எந்த கட்சி

ஆமா இவரு எந்த கட்சி

தலையில் பாஜக தொப்பி போட்டுக் கொண்டிருக்கும் இவர் கையில் அதிமுக கொடியேந்தி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். இந்த புகைப்படத்தை பார்ப்பவர்களுக்கு இவர் எந்த கட்சி என்ற சந்தேகம் ஒரு பக்கம் தோன்றினாலும், அரசியல் நிலவரம் போல தமிழகத்தில் உள்ள தொண்டர்களின் மனநிலையும் இது தான் என்பதை மட்டும் இந்த போட்டோ வெட்டவெளிச்சமாக்குகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

வட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
ஸ்டிரைக் ரேட்
AIADMK 50%
DMK 50%
AIADMK won 1 time and DMK won 1 time since 2009 elections

 
 
 
English summary
The reflection of BJP indirectly ruling the state goverment reflects through this cadres or this is the mindset about admk in the state.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more