செய்யாதுரையின் செம தொடர்புகள்.. ஆடிப் போன வருமான வரித்துறை அதிகாரிகள்.. விறு விறு விசாரணை!
Recommended Video

மதுரை: காண்டிராக்டர் செய்யாதுரையின் தொடர்புகள் வருமான வரித்துறையினரே அதிர்ந்து போயுள்ளனராம். அவருடன் பல விவிவிஐபிகளின் தொடர்பு வைத்துள்ளனர். அது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறதாம்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டிதான் செய்யாதுரை தேவரின் சொந்த ஊராகும். இவரது நிறுவனம்தான் எஸ்பிகே. சாதாரண ஆட்டுத் தோல் தொழிலில் ஈடுபட்டவர் இன்று தமிழகத்தின் அத்தனை நகரங்கள் முதல் பட்டி தொட்டி வரை பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டுகள் மூலம்.
சும்மா லட்டு மாதிரி துட்டு சம்பாதித்துக் குவித்து வைத்துள்ளார் செய்யாதுரை. தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒரு காண்டிராக்டர் குறு நில மன்னர் போல இருப்பார். அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்தான் இந்த செய்யாதுரை.

பணக் குவியல்
இவரது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த அதிரடி வருமான வரித்துறை சோதனையின்போது ரூ. 174 கோடி ரொக்கம், 106 கிலோ தங்க கட்டிகள் ஆகியவை சிக்கின. மேலும் பல நூறு கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யார் யாருடன் தொடர்பு
செய்யாதுரைக்கு மிகப் பெரிய புள்ளிகளுடன் படு நெருக்கமான உறவு இருந்துள்ளது. இந்த தொடர்புகள்தான் தற்போது வருமான வரித்துறையினரின் இலக்காக உள்ளதாம். இவரிடம் ஏகப்பட்ட பினாமிகள் உள்ளனர். இவர்க் மூலமாக பணத்தை முக்கியப் புள்ளிகளுக்கு மாற்றி விடுவாராம் செய்யாதுரை.

முக்கிய அமைச்சருடன் தொடர்பு
மிக மிக முக்கியமான அமைச்சர் ஒருவருடன் செய்யாதுரைக்கு நெருக்கமான நட்பு உள்ளதாம். அவர் அடிக்கடி மதுரை வருவாராம். அங்கு செய்யாதுரையை சந்திக்காமல் திரும்பிப் போக மாட்டாராம். இந்த சந்திப்புகளின்போது பேசப்பட்ட விவகாரம் குறித்து தற்போது துருவித் துருவி விசாரணை நடந்து வருகிறதாம்.

ஐடி விசாரணைக்கு ஒத்துழைப்பு
விசாரணையால் செய்வதறியாமல் திகைத்தாலும் கூட கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கொடுத்து வருகிறாராம். கேள்விகளுக்குப் பதில் தர அவர் மறுக்கவில்லை. மாறாக ஏதாவது பதில் சொல்லி விடுகிறார். அந்த வகையில் ஒத்துழைப்பு தருகிறார் என்று வருமான வரித்துறை தரப்பு கூறுகிறது.

ரெய்டுகள் தொடரும்
செய்யாதுரையிடமிருந்து பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பல முக்கியஸ்தர்களின் வீடுகளில் அடுத்தடுத்து ரெய்டுகள் பாயும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications