கோகுலம் சிட் பைனான்ஸின் 78 அலுவலகங்கள், ஹோட்டலில் ஐடி ரெய்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது கோகுலம் சிட் பைனான்ஸ். அந்த நிறுவனம் முறையாக வரி செலுத்தவில்லை என்று கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

IT raid in Gokulam Chit Finance offices

சென்னை, கோவை, புதுச்சேரி, பெங்களூரு உள்பட 78 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் 500 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் தி. நகர் உள்பட 36 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஒரே நேரத்தில் கோகுலம் சிட் பைனான்ஸின் 78 அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இயங்கி வரும் கோகுலம் நிறுவனத்திற்கு சொந்தமான ஹோட்டலிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT department officials are conducting raids at 78 offices of Gokulam chit finance on wednesday. Raid is going on in the hotel run by Gokulam company in Chennai.
Please Wait while comments are loading...