ஐடி ரெய்டு: எல்லாம் அரசியல் உள்நோக்கமுங்க, நாங்கள் அதிர்ச்சி அடையவில்லை- நாஞ்சில் சம்பத்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

  சென்னை: அரசியல் உள்நோக்கத்தால் ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரிசோதனை நடத்தப்படுவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

  சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

  IT raids wont shock us: Nanjil Sampath

  முறையாக வருமான வரி செலுத்தாததால் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஜெயா டிவி அலுவலகத்தில் 10 பேர் கொண்ட குழுவும், நமது எம்.ஜி.ஆர். அலுவலகத்தில் 6 பேர் கொண்ட குழுவும் சோதனை நடத்தி வருகிறது. 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

  இந்நிலையில் இது குறித்து அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது,

  அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. இதை பார்த்து நாங்கள் ஒன்றும் அதிர்ச்சி அடையவில்லை என்றார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Nanjil Sampath said that IT raids in Jaya TV and other places is being carried out with political motive. He added that, this action won't shock them.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற