For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம்; மாவட்ட அமைப்புக்களை மாற்றி அமைத்தார் ஜெயலலிதா

Google Oneindia Tamil News

சென்னை: 2016 சட்டசபை தேர்தலுக்காக கட்சியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

நிர்வாக வசதிக்காக அதிமுக மாவட்ட அமைப்புகளை மாற்றி அமைத்துள்ளார். இரண்டு, மூன்றாக பிரிக்கப்பட்டிருந்த மாவட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து விரைவில் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து கட்சியின் பொதுக்குழுவும் கூட்டப்பட உள்ளது.

Jaya reconstitutes ADMK functional set up

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்ட அமைப்புகள் நிர்வாக வசதிக்காக மாற்றியமைக்கப்படுகின்றன. இதுவரை, வேலூர் மாநகர், வேலூர் புறநகர் கிழக்கு, வேலூர் புறநகர் மேற்கு என்று இருந்த மாவட்ட அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டு, இனி வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு என்று செயல்படும்.

வேலூர் கிழக்கு - வேலூர் மேற்கு

வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக என்.ஜி.பார்த்திபனும், வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக அமைச்சர் கே.சி.வீரமணியும் செயல்படுவார்கள்.

வேலூர் கிழக்கு மாவட்டத்தில், அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், வேலூர் மேற்கு மாவட்டத்தில், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒன்றியங்கள் இணைப்பு

அதேபோல், சில அ.தி.மு.க. ஒன்றியங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, பரங்கிமலை கிழக்கு, பரங்கிமலை மேற்கு ஒன்றியங்கள் இணைக்கப்பட்டு, பரங்கிமலை ஒன்றியமாக இனி செயல்படும். இதேபோல், திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஒன்றியங்கள் இணைக்கப்பட்டு, திருப்பூர் ஒன்றியமாக இனி செயல்படும்.

கன்னியாகுமரி இணைப்பு

கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டங்கள் இணைக்கப்பட்டு, இனி கன்னியாகுமரி மாவட்டமாக செயல்படும். கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக என்.தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், ஈரோடு மாநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் ஆகிய தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாநகரில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளும், திருப்பூர் மாநகரில் அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய பகுதிகளும், திருப்பூர் புறநகரில் தாராபுரம், காங்கேயம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளும் இடம்பெறும்" என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கட்சி அமைப்பை மாற்றி அமைத்த கையோடு டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட உள்ளது இதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் ஜெயலலிதா என்று கூறப்படுகிறது.

English summary
ADMK general secretary Jayalalitha has reconstituted her party functional set up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X