For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிறந்த நாளில் வேட்பாளர்களை அறிவித்த ஜெயலலிதா!

|

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தனது 66வது பிறந்த நாளன்று அதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இன்று சுப முகூர்த்த நாளும் கூட. எனவே பல வகையிலும் அலசி ஆராய்ந்து இன்று தனது வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

இன்று ரோகினி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். எனவே அவர்களைத் தவிர மற்ற நட்சத்திரக்காரர்களுக்கு நல்லது செய்ய நல்ல நாள். ஜெயலலிதாவுக்கு மக நட்சத்திரம் என்பது நினைவிருக்கலாம்.

Jaya releases ADMK candidates list on her birth day

ஆனால் ஜெயலலிதாவின் ராசி சிம்மம். ஒரு காலண்டரைப் பார்த்தபோது சிம்ம ராசிக்கு இன்று தடை என்று தினசரி ராசி பலனில் போட்டிருந்தது.. ஆனால் தடைகளை வெற்றிப் படிகளாக்குபவர் ஜெயலலிதா என்பதால் காலண்டர் மீது நம்பிக்கை வரவில்லை.

மொத்தத்தில் இன்று நல்ல நாள்தான். கூடவே ஜெயலலிதாவின் பிறந்த நாளும் கூட. எனவேதான் இன்று வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கவுள்ளது என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் ஜெயலலிதா. தொகுதிப் பங்கீடு முடிந்ததும் அதற்கேற்ப வேட்பாளர்களை ஜெயலலிதா வாபஸ் பெறுவார் என்று தெரிகிறது.

English summary
Chief Minister and ADMK supremo Jayalalitha has released her party candidates list on her birth day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X