For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்திற்கு கஞ்சத்தனமா? ப.சி யை கண்டித்து புக் போட்ட ஜெ.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Jaya's slam book on P Chidambaram
சென்னை: மத்திய அரசில் இருந்து தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு நாளுக்குநாள் குறைந்து வருவதற்கு காரணம் ப.சிதம்பரம்தான் என்பது முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு. இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அ.தி.மு.க-வினர் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு வருகிறார்கள்.

'மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளில் தமிழக வளர்ச்சிக்கு ப.சிதம்பரம் போடும் முட்டுக்கட்டை- தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பகிரங்க குற்றச் சாட்டு' என்பதுதான் அந்தப் பிரசுரத்தின் தலைப்பு.

மத்திய அரசில் இருந்து தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு நாளுக்குநாள் குறைந்து வருகிறதாம்.

அறிவித்த திட்டங்களை செயல் படுத்த போதிய அளவுக்கு நிதி இல்லை. அதனால்தான், போட்டித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தாலும், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 6 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடுகளை கொடுக்கவும் நிதி இல்லை. டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் அரசே இயங்குகிறது. அந்தக் கோபத்தின் விளைவுதான் இந்தப் பிரசுரம் என்றும் கூறப்படுகிறது.

நிதிக்குழு அதிகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் குறுக் கிடுகிறார் என்றும் ரகுராம் ராஜன் கமிட்டி பரிந்துரைகளை ஏற்கக் கூடாது என்றும் பிரதமருக்கு 1.10.2013 அன்று ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தையே, தற்போது பிரசுரமாக வெளி யிட்டுள்ளனர். எட்டுப் பக்கங்கள் கொண்ட இந்தப் பிரசுரம் ஜெயா பிரின்ட்டர்ஸில் அச்சிடப்பட்டு மாவட்டத்துக்கு 10 ஆயிரம் பிரதிகள் வீதம் தலைமை கழகத்தில் இருந்து அனுப்பியிருக்கிறார்களாம். இதை மாவட்டச் செயலாளர்கள் ஜெராக்ஸ் அல்லது ரீ-பிரின்ட் செய்து மக்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

English summary
ADMK cadres are distributing a booklet on P Chidambaram written by Jayalalitha all over the state
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X