For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலைக்கு ஓட்டுப் போட்டால் 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை... சரத்குமார் உறுதி

|

கரூர்: இளைஞர்கள் நிறைந்த இந்தியாவில் வரும் 5-ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இரட்டை இலை சின்னத்தை ஆதரிக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

கரூரில் அதிமுக தேர்தல் பொதுக்கூட்டம் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.காமராஜ், மற்றும் கூட்டணிகட்சிகளை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள்,பொதுமக்கள் என 20-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்புரை ஆற்றினார் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார். அவரது பேச்சிலிருந்து...

உண்மையான ஜனநாயக நாடு

உண்மையான ஜனநாயக நாடு

உலகில் உள்ள உண்மையான 25 ஜனநாயக நாடுகளில் இந்தியா இல்லை என்ற கவலை நம் முதல்வருக்கு உண்டு.

போராடுகிறார் ஜெயலலிதா

போராடுகிறார் ஜெயலலிதா

எனவே ஏழை,எளிய மக்கள் வளம் பெறும் வகையில் இந்தியா உண்மையான ஜனநாயக நாடாக வேண்டும் என முதல்வர் போராடிவருகிறார்.

மீனவர்கள் குறைந்து கொண்டே போகிறார்கள்

மீனவர்கள் குறைந்து கொண்டே போகிறார்கள்

மீன் பிடித்தால் கடலிலே மீன் வளம் குறையும் என்பார்கள்.ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை மீனவர்கள் குறைந்து கொண்டே போகிறார்கள். இங்கே மீனவர்கள் சிறைபிடிக்கபடுகிறார்கள்,சுட்டுகொல்லப்படுகிறார்கள்.

மீனவர்களைக் காக்க ஆதரிப்பீர் இரட்டை இலை

மீனவர்களைக் காக்க ஆதரிப்பீர் இரட்டை இலை

எனவே,மீனவர்களை காக்க வேண்டுமென்றால் கச்சதீவை மீட்க வேண்டும் என்பதை முதல்வர் தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருக்கிறார்.

5 ஆண்டுகளில் 10 கோடிப் பேருக்கு வேலை

5 ஆண்டுகளில் 10 கோடிப் பேருக்கு வேலை

இளைஞர்கள் நிறைந்த இந்தியாவில் வரும் 5-ஆண்டுகளில் 10-கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இரட்டை இலை சின்னத்தை ஆதரிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் சரத்குமார்.

English summary
If people vote for ADMK and Jayalalitha, she will give 10 cr new jobs to youth in 5 years, said AISMK leader Sarath Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X