For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிமன்றம், காவல் துறையை மோசமாக விமர்சித்த எச் ராஜா மீது நடவடிக்கை பாயும்- ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: நீதிமன்றம் மற்றும் காவல் துறையை மோசமாக விமர்சனம் செய்த எச் ராஜா மீது நடவடிக்கை பாயும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எச் ராஜா போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்து

அவர் பேசுகையில் போலீஸ் மொத்தமும் கரப்ட் (ஊழல்). போலீஸோட ஈரல் 100 சதவிகிதம் அழுகி போச்சு. நான் இங்க இருக்குற இந்து வீடு வழியா போறேன். முடிஞ்சா தடுத்து பாரு. ஹைகோர்ட்டாவது..... (கெட்டவார்த்தை). இன்னைக்கு புழல் சிறையில யாரை கைது பண்ணி இருக்காங்க சொல்லுங்க. நீ இந்துவை டார்ச்சர் பண்ணுற. நீ இந்துவா?

பாதிரியார் கைகூலி

பாதிரியார் கைகூலி

நான் இப்ப ஸ்டேஜ் போடுறேன், முடிஞ்சா தடுங்க, கிறிஸ்துவர், முஸ்லிம், பாதிரியார் கைகூலி நீங்கதான். போலீசுக்கு வெட்கமா இல்லை. பயங்கரவாதிக்கு துணை போறீங்க நீங்க. வெட்கமாக இல்லை, நான் கொடுக்குறேன் லஞ்சம். ஹைகோர்ட்டாவது ----------- (தகாத வார்த்தை), என்று மிகவும் மோசமாக அநாகரீகமாக பேசியுள்ளார்.

மோசமான வார்த்தை

மோசமான வார்த்தை

நீதித்துறை குறித்து கேவலமாக பேசிய எச் ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் நீதிமன்றம், காவல்துறை பற்றி ஹெச்.ராஜா மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

கண்டனங்கள்

கண்டனங்கள்

சட்டவல்லுநர்களின் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனிடையே எச் ராஜாவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

English summary
Minister Jayakumar says that after consulting with advocates, action will be taken against H.Raja who talks rubbishly on Police and Highcourt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X