For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா சிகிச்சை: ஜூலியஸ் சீசரும்.... அப்பல்லோவும்...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : ஜெயலலிதா நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. உள்ளாட்சி தேர்தலும் ரத்து செய்யப்பட்டு விட்டதால் அப்பல்லோ மருத்துவமனைதான் அதிமுகவினரின் டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டது. தினந்தோறும் பிரார்த்தனைகள், பூஜைகள் களை கட்டி வருகின்றனர்.

அப்பல்லோவிற்கு வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆனாலும் அம்மா இருக்கும் வரைக்கும் கவலை வேண்டாம். நஷ்டத்தை நாங்களே சரி செய்து விடுகிறோம் என்று கூறிவிட்டனராம். ஆனாலும் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து நோயாளிகளை ஈர்க்கிறது அப்பல்லோ மருத்துவமனை.

அப்பல்லே பற்றி பண்டைய காலத்தில் உள்ள கதையை இப்போது சமூக வலைத்தளங்களில் உலாவிடுகின்றனர் வலைஞர்கள்... இது படித்து ரசிக்க மட்டுமே!

Jayalaithaa health: God of the medicine apollo

கிமு 35 ஆம் ஆண்டு. இன்றைக்கு 2050ஆண்டுகளுக்கு முன்...

ரோம் பேரரசர் ஜூலியஸ் சீசர் மரணப் படுக்கையில் இருக்க , அவரின் உடல்நலம் பற்றி வெளியே தெரிந்தால் அண்டை நாட்டு மன்னன் ரோம் பேரரசை கைப்பற்ற முயலக் கூடும் என்பதால் ரகசியமாக அரண்மனையில் வைத்தியம் நடக்கிறது.

அரசர் நலம் பெற்று விரைவில் மக்கள் முன் தரிசனம் தருவார் என அறிவிக்கிறார் பேரரசி கிளியோபாட்ரா. இருந்தாலும் மக்கள் மத்தியில் கவலை . மருத்துவக் கடவுளை நோக்கி ஓடுகிறார்கள்.

ஒலிம்பஸ் குன்றின் அடிவாரத்தில் மக்கள் குவிகிறார்கள் . இருந்தாலும் குன்றின் மேல் ஏற மக்களுக்கு அனுமதியில்லை. கீழே இருந்தவாறே சூரியனை தொழுகிறார்கள். ஏனென்றால் சூரியனுக்கான கிரேக்க கடவுள் தான் மருத்துவத்திற்கும் கடவுள் .

மந்திரி பிரதானிகளுடன் தலைமை மருத்துவ குரு குன்றின் மேலே, மருத்துவ கடவுளை நோக்கி பூஜை செய்தார். திடீரென அவர் கண்களில் பிரகாசம் ...

மந்திரிகள் என்ன என்று கேட்க ... மருத்துவ கடவுள் தன் கண் முன் தோன்றியதாகவும் மன்னர் குணமாவார் என கூறியதாகவும் சொன்னார்.

எங்கள் கண்களுக்கு கடவுள் தெரியவில்லையே என மந்திரிகள் கேட்க ,யாருடைய மனைவி பத்தினியோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே கடவுள் தெரிவார் என கூறிவிட்டு குரு புறப்பட்டார்.

நம் கண்களுக்கு தெரியவில்லை என கூறினால் நம் மனைவி பத்தினி இல்லை என ஆகிவிடும் .எனவே நேரம் ஆக ஆக எல்லா மந்திரிகளும் கடவுளை பார்த்துவிட்டதாக கூறி கீழே வந்தனர். மக்களிடம் மருத்துவக் கடவுளைகண்டதாகவும், மன்னர் குணமாகிவிடுவார் என கூறியதாகவும் தெரிவித்தனர்.

இருந்தாலும் மக்களிடம் குழப்பம் நீடிக்கவே, தலைமை தளபதி வந்து மலையில் ஏறி, அவரும் கடவுளை பார்த்ததாக கூறினார்.

இது தான் சாக்கு என மன்னனால் ஓரம்கட்டப்பட்டு இருந்த குறுநில மன்னன் தாலாமாவல்ஸ் ஒலிம்பஸ் மலைக்கு வந்தார். மலையின் இரண்டாம் சுற்று வரைசென்றதாகவும் , கடவுளை பார்த்தவர்கள் மன்னர் குணமாகி விடுவார் எனகூறியதாகவும் சொன்னார்.

மன்னர் குணமானாரா? இல்லையா? என்ற மர்மம் நீடித்தது.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்ன என்றால் .. கிரேக்க புராணங்களின் படி .. மருத்துவ கடவுளின் பெயர் !! "அப்போலோ"

English summary
Apollo is one of the most complex and important gods, and is the god of many things, including: music, poetry, art, oracles, archery, plague, medicine, sun, light and knowledge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X