• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லோக்சபா தேர்தலுக்கு அதிமுக ரெடி: 40 தொகுதிக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்த ஜெ.!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிக்கான அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூறியுள்ளதாவது:

"நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை முழுமையாக ஆற்றுவதற்கு ஏதுவாக, கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளும், கட்சியினரும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும்.

Jayalalitha announces election teams for LS polls

கட்சியினர் அனைவரும் தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மதுசூதனன், விசாலாட்சி நெடுஞ்செழியன்

1. திருவள்ளூர் (தனி): அமைச்சர் பி.வி.ரமணா, டாக்டர் வேணுகோபால் எம்.பி., மாணவர் அணி செயலாளர் விஜயகுமார்.

2. சென்னை வடக்கு: அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் மாதவரம் மூர்த்தி, டி.ஜி.வெங்கடேஷ் பாபு.

3. சென்னை தெற்கு: அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைச்சர் பா.வளர்மதி, ராஜலட்சுமி எம்.எல்.ஏ, சரஸ்வதி ரெங்கசாமி, வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ, விருகை ரவி.

4. மத்திய சென்னை: அமைச்சர் அப்துல் ரஹீம், அமைப்புச் செயலாளர்கள் சுலோச்சனா சம்பத், கோகுல இந்திரா, ஜே.சி.டி.பிரபாகர் எம்.எல்.ஏ. பாலகங்கா எம்.பி.

5. ஸ்ரீபெரும்புதூர்: அமைச்சர் சின்னையா, சி.ஆர்.சரஸ்வதி, டாக்டர் கவிதா.

வா.மைத்ரேயன், சிட்லபாக்கம் ராஜேந்திரன்

6. காஞ்சிபுரம் (தனி): டாக்டர் வா.மைத்ரேயன் எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி., வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ.

7. அரக்கோணம்: அமைப்பு செயலாளர் பொன்னையன், வேலூர் ஏழுமலை, எஸ்.ஆர்.கே.அப்பு.

8. வேலூர்: அமைச்சர் கே.சி.வீரமணி, கே.எம்.கலைச்செல்வி.

9. கிருஷ்ணகிரி: அமைச்சர் கே.பி.முனுசாமி, புரசை கோ.செல்வம்.

10. தருமபுரி: அமைச்சர் பழனியப்பன், ஜெ. பேரவை செயலாளர் டி.ஆர்.அன்பழகன், கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.

11. திருவண்ணாமலை: வக்கீல் வி.எஸ்.சேதுராமன், ஆர்.கமலகண்ணன், என்.பாலசந்தர்.

செம்மலை, தோப்பு வெங்கடாசலம்

12. ஆரணி: அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், தாடி ம.ராசு, டி.சகுந்தலா.

13. விழுப்புரம் (தனி): டாக்டர் வெ.சரோஜா, கே.ஏ.கே.முகில், டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.பி.

14. கள்ளக்குறிச்சி: அமைச்சர் ப.மோகன், வரகூர் ஆ.அருணாசலம்.

15. சேலம்: செ.செம்மலை எம்.பி., அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.கே.செல்வ ராஜூ எம்.எல்.ஏ.

16. நாமக்கல்: அமைச்சர் பி.தங்கமணி, என்.சதன் பிரபாகர்

17. ஈரோடு: அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சம்பத் குமார், பழனிவேல்

18. திருப்பூர்: அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திருப்பூர் விசாலாட்சி.

19. நீலகிரி (தனி): அமைப்பு செயலாளர் செல்வராஜ், அமைச்சர் ஆனந்தன், மில்லர், அர்ஜுனன் எம்.பி.,

20. கோவை: சின்னசாமி எம்.எல்.ஏ., மேயர் செ.மா. வேலுச்சாமி, வி.எம்.விஷ்ணுபிரபு,.

தம்பித்துரை, நத்தம் விஸ்வநாதன்

21. பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் தாமோதரன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

22. திண்டுக்கல்: அமைச்சர் நத்தம் விசுவநாதன், டாக்டர் சோலை இரா.கண்ணன்.

23. கரூர்: மு.தம்பிதுரை எம்.பி., அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆர்.எஸ்.முத்து சாமி.

24. திருச்சி: குமார் எம்.பி., அமைச்சர் சுப்பிரமணியன், ஆர்.மனோகரன், விஜய பாஸ்கர் எம்.எல்.ஏ.

25. பெரம்பலூர்: அமைச்சர் டி.பி.பூனாட்சி, ரத்தினவேல் எம்.பி., ரவிச்சந் திரன்.

26. கடலூர்: அமைச்சர் எம்.சி.சம்பத், எஸ்.அப்துல் அமீது.

27. சிதம்பரம் (தனி): கே.கே.கலைமணி, சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன். கவிதா ஜி.ராஜேந்திரன்,

28. மயிலாடுதுறை: அமைச்சர் கே.ஏ.ஜெயபால், ரெங்கசாமி எம்.எல்.ஏ.,

29. நாகப்பட்டினம் (தனி): கு.தங்கமுத்து, அமைச்சர் ஆர்.காமராஜ்,

ஓ.பன்னீர் செல்வம், செல்லூர் ராஜூ

30. தஞ்சாவூர்: துரை கோவிந்தராஜன், அமைச்சர் வைத்திலிங்கம்.

31. சிவகங்கை: உதய குமார் எம்.எல்.ஏ., பி.ஆர்.செந்தில்நாதன்,

32. மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.எஸ். பாண்டியன், முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ,

33. தேனி: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கா.தவசி, டி.டி.சிவகுமார்.

34. விருதுநகர்: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, டி.ஆர்.நம்பிராஜ், சக்தி கோதண்டம்.

35. ராமநாதபுரம்: அன்வர் ராஜா, அமைச்சர் சுந்தரராஜ், ஜி.முனியசாமி.

பி.எச். பாண்டியன் நாஞ்சில் சம்பத்

36. தூத்துக்குடி: ஜெனிபர் சந்திரன், மேயர் சசிகலா புஷ்பா, அமைச்சர் எம்.சண்முகநாதன், பி.மனோகரன்.

37. தென்காசி (தனி): மனோஜ் பாண்டியன் எம்.பி., அமைச்சர் செந்தூர்பாண்டியன், நாகூர் மீரான், சின்னத்துரை.

38. திருநெல்வேலி:- பி.எச்.பாண்டியன், முருகையா பாண்டியன்.

39. கன்னியாகுமரி: தமிழ்மகன் உசேன், நாஞ்சில் சம்பத், அமைச்சர் பச்சைமால், ஜஸ்டின் செல்வராஜ், சிவசெல்வராஜன், ஜான்தங்கம்.

40. புதுச்சேரி: அமைச்சர்கள் ஆர்.காமராஜ், எம்.சி.சம்பத், அன்பழகன் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., ஓமலிங்கம்.

புரட்டாசிக்கு முன்பாக

இன்றைக்கு ஆவணி மாதம் கடைசி நாள். அதுவும் திருவோணம் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. சட்டமன்ற தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ விநாயகர் சதுர்த்திக்கு பிந்தைய ரிஷி பஞ்சமி நாளில்தான் முக்கிய முடிவுகளை எடுப்பார் ஜெயலலிதா கடந்த வாரம் அதற்கான ஆலோசனைகளை முடித்த ஜெயலலிதா நாளை புரட்டாசி மாதம் பிறப்பதை ஒட்டி உடனடியாக பணிக்குழு பொறுப்பாளர்களின் பெயர்களை அறிவித்து விட்டார்.

தேர்தல் கூட்டணி

லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்தார் ஜெயலலிதா. நேற்று துக்ளக் இதழ் ஆசிரியர் சோ.ராமசாமி சந்தித்து பேசிய பின்னர் அந்த முடிவில் ஏதோனும் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
AIADMK supremo has announced election teams for all 40 LS seats in TN and Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X