For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நல்ல நேரம்… ராகுகாலம்… எமகண்டம் பார்த்தும் ஜெ.வுக்கு எதிராக வந்த தீர்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துச்சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும்.

ஜெயல்லிதாவிற்கு பாதகமான தீர்ப்புதான் வரும் என்று ஏராளமான ஜோதிடர்கள் அறிவித்தனர். ஒருசிலர் சாதகமான தீர்ப்பு வரும் என்று கூறினார். எனினும் ஜெயலலிதாவின் ஜோதிட நம்பிக்கை பொய்த்துப்போனது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது.

Jayalalithaa assets case astrology failed to save jayalalithaa

சிம்மராசிக்கு பாதகம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிம்ம ராசி, மிதுன லக்னம். அந்தவகையில், ஜெயலலிதாவின் ஜாதகம் வலிமையும் வல்லமையும் கொண்டதாக இருக்கிறது. இன்றைய கோச்சார நிலவரப்படி ராசிக்குரிய குரு 6, 8, 12-ஆம் இடத்துக்கு வருவது சிறப் பான அம்சம் கிடையாது. என்று ஜோதிட சிகாமணி டி.வி.ராஜாசெந்தில்குமார் தெரிவித்திருந்தார்.

பெரிய அளவில் பாதிப்பில்லை

சுமார் 17 ஆண்டுகளாக நடந்து வந்துள்ள இந்த வழக்கின் தீர்ப்பு, 12 ஆம் இடத்துக்கு குரு வந்துள்ள இந்த காலக்கட்டத்தில் வருகிறது என்பதை வைத்து கணிக்கும் போது சற்று யோசிக்க வைக்கிறது. அதனால், கிரக சூழல்களை ஆராய்ந்ததில் குறைவான பாதக முடிவுகளே வர வாய்ப்பிருக்கிறது. அதாவது, பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

குருபார்வை சரியில்லையே

ஜூன் 11 வரை 11 ஆம் இடத்தில் இருந்தார் குரு. எல்லாவிதமான நன் மைகளும் இந்த ஜாதகக்காரருக்கு அள்ளி அள்ளித் தந்தார். குறிப்பாக, நாடாளு மன்ற தேர்தலில் ஜெயலலிதா அதிக வெற்றிகளை குவிக்க காரணம் குரு 11-ஆம் இடத்தில் இருந்ததுதான். ஜூன் 13-லிருந்து குரு 12-ஆம் இடத்துக்கு வந்ததால்தான் பாதகம்'' என்று கூறியுள்ளார்.

பதவியிழப்பு, அவமானம்

சிம்ம ராசி, மக நட்சத்திரம் கொண்ட முதல்வர் ஜெயலலிதாவின் தசா புக்தி எப்படிப்பட்டதாக இருந்தாலும் கோச்சாரம் என்பது சிம்ம ராசிக்கு எதிர் மறையாகவே இருக்கிறது. சிம்ம ராசிக்கு 12-ல் குரு வந்துள்ளார். இது மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். புராணத்தில் ராவணனின் ராசிக்கு குரு 12-ல் வந்த போதுதான் ராவணன் பதவிகளை இழக்க நேர்ந்தது. முடிதுறந்தான் ராவணன். அவமானப்பட்டான் என்று "அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

சனியால் கெடுதல்

அதேபோலத்தான் 12-ல் உள்ள குரு, இந்த ராசிக்குரியவருக்கும் கெடுதலையும் அவமானத்தையும் ஏற்படுத்துவார். மேலும், சிம்ம ராசிக்கு கடந்த ஏழரை நாட்டு சனியில் எல்லாவிதமான யோகங் களையும் கொடுத்துவிட்டார். அடுத்து வரும் சனிப்பெயர்ச்சி, கொடுத்த யோகங்களுக்கு எதிர்மறையாகத்தான் கொடுப்பார். இந்த சனிப்பெயர்ச்சியானது 2014 டிசம்பரில் நடக்கவிருக்கிறது. அப்போது ராசிக்கு 4-ல் அமர்ந்து ஜென்ம நட்சத்திரத்தை சனி பார்க்கும் காலத்தில் மாபெரும் கெடுதலையே செய்வார் என்றும் கூறியுள்ளார்.

சனியின் இந்த ஆக்ரோஷம், சனிப் பெயர்ச்சி நடக்கும் டிசம்பருக்கு 3 மாதத்திற்கு முன்பாகவும் காட்டும் அல்லது சனிப் பெயர்ச்சி நடந்த பிறகும் காட்டலாம். ஆகவே, சுருங்கச் சொன்னால் சிம்ம ராசிக்கு 4-ல் வரும் சனியும் 12-ல் உள்ள குருவும் பதவியில் இருப் பவர்களை நீடிக்க விடமாட்டார்'' என்று கூறியுள்ளார் ஜோதிடர் சுப்ரமணியம்.

ஜெ.க்கு பின்னடைவு

"ஜோதிடர்களிடம் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகம் என்பது அவரது பிறந்த தேதி 24.2.1948 என்றும் பிறந்த நேரம் மாலை 5.30 என்றும் கூறுகிறது. இவருடைய ஜாதகத்தில் சக்கரயுகம் இருக்கிறது. அதனால் தான் அரசாளும் யோகம் இவருக்கு கிட்டியது. இவருக்கு ஜென்ம நட்சத்திரம் மகம். ராசி சிம்மம். நட்சத்திரமும், ராசியும் இவருக்கு சாதகமாக இருந்தாலும் கோச்சாரப்படி சற்று பின்னடைவே நடக்கும். டிசம்பருக்குள் தீர்ப்பு வந்தால் பாதகமாகும். அதற்கு மேல் எனில் சாதகமாகலாம் என்று ஜோதிட பண்டிட் எம்.ஏ. பெருமாள் கூறியிருந்தார்.

தண்டனை கிடைக்காது

சிம்ம ராசியில் உள்ள சனி டிசம்பருக்கு பிறகு விருச்சிகத்துக்கு தாவி விடுகிறார். அதனால் இப்போதைய கிரக சூழல்கள் படி ஜாதகக்காரருக்கு பாதகமாக இருந்தாலும் பெரிய அளவில் தண்டனைக் கிடைக்காது'' என்கிறார்.

பாதகமான சூழ்நிலை

முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்த வரை தற்போது அவருக்கு குரு தசை நடக்கிறது. அவரது மிதுன லக்னத்தின்படி இந்த குருபகவான் பாதகாதிபதி ஆகிறார். அதாவது, மிகப்பெரிய துன்பத்தை தரக்கூடிய அமைப்பில் இருக்கிறார் என்று ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கூறியுள்ளார்.

ஏற்றங்கள் அதிகம்

அவருக்கு குரு தசை இன்னும் 13 வருடங்களுக்கு மேல் நடக்கவிருக்கிறது. அதன் மூலம் ஜெயலலிதா இன்னும் சில உன்னதங்களை எட்டுவார். இறுதிவரை சரிவில்லாத ராஜயோக ஜாதகம் அவருடையது. எந்த ஒரு ராஜயோகமும் தொடர்ச்சியாக இருப்பதில்லை எனும் விதிப்படி இடையில் சில தற்காலிக பின்னடைவுகள் அவருக்கு இருந்தாலும் தற்போதைய ஜோதிட நிலவரப்படி அவருக்கு இனி ஏற்றங்களே அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கைவிட்ட ஜோதிட நம்பிக்கை

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கோவில்களில் யாகங்களும், பூஜைகளும் நடைபெற்றன. நல்லநேரம், ராகுகாலம், எமகண்டம் பார்த்துதான் அவர் நீதிமன்றத்திற்கே கிளம்பினார். ஆனால் அந்த நம்பிக்கைகள் எதுவுமே ஜெயலலிதாவிற்கு கை கொடுக்கவில்லை.

English summary
Jayalalithaa assets case astrology failed to save jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X