இலங்கை சிறையிலிருந்து 47 மீனவர்கள், 57 படகுகளை விடுவிக்க நடவடிக்கை கோரி மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 47 தமிழக மீனவர்கள் மற்றும் 57 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அப்போது தமிழக மீனவர்களின் படகுகளும் சிறை பிடிக்கப் படுகின்றன.
இவ்வாறு சமீபத்தில் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் சேர்த்து இலங்கைச் சிறையில் 47 தமிழக மீனவர்கள் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களது 57 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 47 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், இது குறித்து இலங்கை அரசிடம், இந்திய வெளியுறவுத்துறை முறையிட உத்தரவிடுமாறும் அந்தக் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மேலும் 6 மீனவர்கள்...
17.12.2015 அன்று தமிழக மீனவர்கள் கடத்தப்பட்ட நிலையில் அதுகுறித்து நான் தங்களது கவனத்திற்குக் கொண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் 19.12.2015 அன்று மீண்டும் 6 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மீனவர்கள்...
புதுக்கோட்டை மாவட்டம்ஜெகதாப்பட்டனத்திலிருந்து ஒரு படகில் மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை இலங்கைப் படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

தொடர்கதை...
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து பிடித்துச் செல்வது தொடர் கதையாகி வருகிறது. மேலும் தாக்குல்களும், கடத்தல்களும் தொடர்ந்து நடந்து வருவது நிறுத்தப்பட வேண்டும்.

பாக் ஜலசந்திப் பகுதியில்...
நமது மீனவர்கள் பாக் ஜலசந்திப் பகுதியில் தங்களது பாரம்பரிய மீன்பிடி தொழிலை நிம்மதியாகவும், அமைதியாகவும் மேற்கொள்ள வழி வகை செய்ய வேண்டும்.

நினைவூட்டல்...
ஆழ் கடல் மீன்பிடிக்கும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் ரூ. 1520 கோடி வழங்க வேண்டும் என்றும் வருடாந்திர மீன்பிடி சாதன பராமரிப்புக்காக ரூ. 10 கோடி தர வேண்டும் என்றும் நான் தங்களுக்கு விடுத்த கோரிக்க இன்னும் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

சேதமடைந்த படகுகள்...
தற்போதைய நிலையில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 57 மீன் பிடி படகுகள் உள்ளன. இவை பயன்படுத்தப்படாமல் உள்ளதாலும், வட கிழக்குப் பருவ மழையாலும் சேதமடைந்த நிலையில் உள்ளன.

வாழ்வாதாரம் பாதிப்பு...
இதை நம்பியே மீனவர்கள் உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே இவற்றை மீண்டும் சீரமைத்துத் தர மத்திய அரசு நடவடி்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை தேவை...
இந்த விவகாரத்தி்ல உங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய வெளியுறழுத்துறை அமைச்சர் மூலமாக இலங்கையுடன் பேசி அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள 47 மீனவர்களையும், 57 மீன் பிடி படகுகளையும் மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இவ்வாறு அதில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications