காலா பட வழக்கு.. 23ம் தேதிக்குள் ரஜினி, ரஞ்சித் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'காலா' பட வழக்கு தொடர்பாக வரும் 23ம் தேதிக்குள் ரஜினி, ரஞ்சித், தயாரிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா கரிகாலன். இது ரஜினியின் 164-ஆவது படம். இதன் படப்பிடிப்புகள் கடந்த 28-ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Kaala Karikalan title and story issue, chennai court Order to rajini reply by 23rd this month

படத்தின் தலைப்புக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனிடையே ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' திரைப்படத்தை தயாரிக்க தடை விதிக்கக்கோரி சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் காலா திரைப்படத்தின் தலைப்பு, கதைக் கரு தன்னுடையது எனவும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996 -ஆம் ஆண்டே காலா பெயரை தான் பதிவு செய்திருப்பதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை 6-வது உதவி உரிமையியல் நீதிபதி தமிழரசி, இதுதொடர்பாக பதிலளிக்க எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 23ம் தேதிக்குள் ரஜினிகாந்த், ரஞ்சித், தயாரிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kaala Karikalan title and story issue: A person named Rajasekar has filed plea to ban the movie Kaala.
Please Wait while comments are loading...