For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலா தடைகளை தாண்டி வெற்றிபெறும்.. கர்நாடகாவிலிருந்து திரும்பிய கமல் வாழ்த்து

விஸ்வரூபம் படம் போல காலா படமும் தடைகளை தாண்டி வெளியாகி வெற்றிபெறும் என்று கர்நாடகாவில் இருந்து திரும்பிய கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை தீர்வு...கமலுக்கு கண்டனம்- வீடியோ

    சென்னை: விஸ்வரூபம் படம் போல காலா படமும் தடைகளை தாண்டி வெளியாகி வெற்றிபெறும் என்று கர்நாடகாவில் இருந்து திரும்பிய கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

    காவிரி பிரச்சனைக்காக கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பெங்களூர் சென்று இருந்தார். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக குமாரசாமியிடம் அவர் சில கோரிக்கைகளை வைத்து இருந்தார்.

    Kaala will win just like Vishwaroobam says Kamal, after his meeting with Kumaraswamy

    மேலும் காலா படத்தை பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசவில்லை, காலாவை விட காவிரி முக்கியம் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார். இந்த சந்திப்பு குறித்து பல விதமான கருத்துக்கள் கூறப்பட்டது. தற்போது பெங்களூரில் இருந்து திரும்பிய கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளார்.

    கர்நாடகா, தமிழ்நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும். இரு மாநிலங்களின் ஒற்றுமைக்காக கர்நாடகா முதல்வரை சந்தித்தேன். நீதிமன்றம் சொல்லி இரண்டு மாநிலத்திற்கும் ஒற்றுமை வராது. அதனால்தான் இந்த சந்திப்பு.

    காலா திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். என்னுடைய விஸ்வரூபம் படத்திற்கு நிறைய எதிர்ப்பு வந்தது. ஆனால் கடைசியில் பாடம் வெளியாகி வெற்றி அடைந்தது. விஸ்வரூபம் போல காலாவும் தடைகளை தாண்டி வெளியாகி வெற்றிபெறும்.

    எஸ்வி சேகர் இதுவரை கைது செய்யப்படாதது தவறுதான். தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது போலீஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Kaala will win just like Vishwaroopam says Kamal, after his meeting with Kumaraswamy regarding Cauvery issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X