Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எங்கிட்ட 300 ஓட்டு இருக்கு"..விசிக வேட்பாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த காங்கிரஸ் நிர்வாகி.. சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: ''இந்த நிமிடம் வரை எனக்கு தெரியாது. அப்படியென்றால் எனக்கு என்ன மரியாதை.. இங்கு இருக்கும் 300 ஓட்டுகளை எங்களால் வாங்கி தர முடியும்'' என கண்கள் சிவக்க கொந்தளித்த காங்கிரஸ் நிர்வாகி, விசிக பெண் வேட்பாளர் மாலதியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் திமுக தனியாகவும், அதிமுக தனியாகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன. மேலோட்டமாக பார்க்கும்போது கூட்டணி கட்சி தலைவர்கள் மேடைகளில் ஒருசேர நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை நாம் பார்க்கலாம்.

kallakurichi-vck-candidate-malathi-who-fell-at-the-feet-of-the-congress-executive-seeking-forgivenes

ஆனால் தொகுதி வாரியாக சென்று பார்த்தால் தான் நிர்வாகிகளின் வன்மம், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையேயான போட்டி, பொறாமை, வெறுப்பு உள்ளிட்டவை தெரியவரும்.

அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரசாரத்துக்கு சென்ற விசிக வேட்பாளரை கடிந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் காங்கிரஸ் நிர்வாகி.

பண்ணையார் தனத்தை நிரூபித்த காங்.,

தமிழ்நாட்டில் 1967 ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இப்போது திமுக கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பண்ணையார் தனம் செய்வதாக இன்று வரை குற்றச்சாட்டு உள்ள நிலையில் அதற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. அதிர வைத்த இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

விசிக பெண் வேட்பாளர்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மொத்தம் 8 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டன. இதில் 6 தனி தொகுதிகளும், 2 பொதுத்தொகுதிகளும் அடங்கும். திமுக கூட்டணியில் விசிகவிற்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி தான் கள்ளக்குறிச்சி. இது தனி தொகுதியாகும். இந்த தொகுதியில் விசிக சார்பில் மாலதி என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்குவதால் அவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கொந்தளித்த காங்கிரஸ் நிர்வாகி

அந்த வகையில், கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார்.அப்போது அங்கு நின்ற காங்கிரஸ் நிர்வாகிகள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர். மேல்நாரியப்பனூர் கிராமத்துக்கு வாக்கு கேட்க வருவதாக முன்கூட்டியே ஏன் எங்களிடம் சொல்லவில்லை என்று அவர்கள் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினர்.

மன்னிப்பு கேட்ட விசிக வேட்பாளர்

இந்த வேளையில், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ''என்ன அண்ணன்.. அண்ணன்.. எனக்கு என்ன மரியாதை இருக்கு.. இங்கு இருக்கும் 300 ஓட்டுகளை என்னால் வாங்கி தர முடியும்'' என்று வேட்பாளர் மாலதியை நோக்கி விரலை நீட்டி ஆக்ரோஷமானார். இதனை சற்றும் எதிர்பாராத விசிக வேட்பாளர் மாலதி, ''அண்ணன் அண்ணன்'' என்று அவரை நோக்கி கையெடுத்து கும்பிட்டு காலில் விழுந்து மன்னித்துவிடும்படி கேட்டு கொண்டார்.

ஆனால், கோபம் தணியாத அவர், ''இந்த நிமிடம் வரை எனக்கு தெரியாது'' என்றார். அப்போது வேட்பாளருடன் வந்த ஒருவர், ''சரி சரி.. வாங்கண்ணா'' என்று கூறி, ''டேய் உன் வேலையை பாரு'' என்று கடிந்து கொண்டு கோபத்தை கொப்பளித்தார். இதனால் வேறு வழியின்றி பெண் வேட்பாளர் மாலதி அந்த காங்கிரஸ் நிர்வாகியின் கையை பிடித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அங்கிருந்து சென்றார்.

ஆனாலும், ஆத்திரம் அடங்காத காங்கிரஸ் நிர்வாகி வாக்கு சேகரிக்க செல்லாமல் அங்கேயே நின்றார். அவருடன் நின்றவர்களும் வாக்கு சேகரிக்க மறுத்து சமாதானம் செய்ய வந்தவர்கள் திட்டி கொண்டு நின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+