கள்ளக்குறிச்சி பள்ளி கதவுகளை உடைத்து ‘கெத்தாக’ ஸ்டேட்டஸ்.. “இப்போ என்னாச்சுனா” தட்டி தூக்கிய போலீஸ்!
கள்ளக்குறிச்சி : சின்ன சேலம் பள்ளியில் நடைபெற்ற வன்முறையின்போது வகுப்பறைக் கதவுகளை கழற்றி வந்ததை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்திருந்த இளைஞர்கள் சிக்கியுள்ளனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அடுத்த கனியாமூர் பள்ளியில் நடந்த கலவரத்தின்போது பள்ளி சொத்துகளை உடைத்து சேதப்படுத்திய விவகாரத்தில் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் வன்முறையாளர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்குள் கடைசி நேரத்தில் புகுந்து, கதவுகளை உடைத்து, அந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சியை கெத்தாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்ட இளைஞர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாணவி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்படும் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதியில் 3வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் குற்றம்சாட்டினர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு நடந்த போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.

பள்ளியில் வன்முறை
பள்ளி முன்பு குவிந்த போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர். அப்போது பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் வகுப்பறைகளை அடித்து நொறுக்கினர். மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களைத் தூக்கிச் சென்றனர். மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பேருந்துகள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின.

வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைப்பு
கள்ளக்குறிச்சி பள்ளியில் நடைபெற்ற போராட்டத்திற்கு வாட்ஸ்அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக உளவுத்துறை தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கி அதன் மூலம் ஒருங்கிணைந்து போராட்டக்காரர்கள் திரண்டதாக கூறப்படுகிறது. அந்த வாட்ஸ்அப் குழுக்களில் தவறான தகவல்களைப் பரப்பி, பலரையும் வன்முறைக்குத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.

தனிப்படை
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறிய சைபர் கிரைம் எஸ்.பி சண்முகப்பிரியா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 20 பேர் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு, போராட்டத்திற்கு இளைஞர்களை ஒன்றிணைத்த வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான சமூக வலைதள பதிவுகளை வெளியிட்டவர்களின் செல்போன் எண்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

தீ வைத்தவர்கள் கைது
வாட்ஸ்அப் குரூப்களில் இருந்த நபர்களின் மொபைல் எண்களை சேகரித்த போலீசார், அதை வைத்து கலவரத்தில் பங்கேற்ற நபர்களை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளின் அடிப்படையில், போலீசாரின் வாகனத்துக்கு தீ வைத்த நபரான நிதிஷ் என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
பள்ளியில் பெரும் வன்முறை ஏற்பட்ட பிறகு தாமதமாக வந்த இளைஞர்கள் சிலர் எரிந்து கிடந்த வகுப்பறைக்குள் புகுந்து, பெஞ்ச்சுகளை அடித்து நொறுக்கிவிட்டு, கதவுகளைக் கழற்றி வந்ததை தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் கெத்தான வைத்திருந்துள்ளனர். இந்தக் காட்சிகள் மூலம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (24), கார்த்தி (25) ஆகிய இருவரையும் அடையாளம் கண்டு நேற்று கைது செய்தனர்.

ஒரே நாளில்
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் விளையாடும் சாதனங்களை சேதப்படுத்திய இளைஞர்கள் வீடியோவால் வசமாக சிக்கினர். நேற்று ஒரே நாளில் மட்டும் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடியோ ஆதாரங்களை வைத்து அருண்குமார், கமல்ராஜ், ஸ்ரீதர், சத்தியமூர்த்தி, பாலமூர்த்தி ஆகிய 5 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications