ரசிகர்களின் பணத்தில் அரசியல் கட்சி... கணக்கு வைக்க கமல் ஆப் அறிமுகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் கட்சி தொடங்குவதற்கு பணம் இல்லை என்று கவலை இல்லை. கட்சி தொடங்க ரசிகர்கள் பணம் தருவார்கள் அதற்கு கணக்கு வைக்க புதிய ஆப் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் கமல்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஓராண்டாக அரசியல்வாதிகள் மற்றும் அரசை விமர்சித்து டிவிட்டி வந்தார். அரசியலக்கு விரைவில் வருவேன் என்றும் அவர் பகிரங்கமாக தெரிவித்தார்.

அவரது பிறந்த நாளான வரும் நவம்பர் 7ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் அதனை கமல்ஹாசன் மறுத்துவிட்டார்.

கமல் சந்திப்பு

கமல் சந்திப்பு

இந்த நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசன் இன்று ரசிகர்கள் மத்தியில் பேசினார். ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார். நவம்பர் 7ல் கேக் வெட்ட வேண்டிய நேரம் இல்லை, கால்வாய் வெட்ட வேண்டிய நேரம் என்று கூறிய கமல் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றார்.

ரசிகர்கள் கொடுக்கும் பணம்

ரசிகர்கள் கொடுக்கும் பணம்

அரசியல் கட்சி தொடங்குவதற்கு பணம் இல்லை என்று கவலை இல்லை. கட்சி தொடங்க ரசிகர்கள் பணம் தருவார்கள் அதற்காக நான் பயப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

புதிய ஆப் அறிமுகம்

புதிய ஆப் அறிமுகம்

ரசிகர்களிடம் வாங்கும் பணத்திற்கு கணக்கு வைக்க செயலி பயன்படும். சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தை மீட்க முயற்சிப்பேன், பணத்தை சுவிஸ் வங்கியில் போடமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

10 மாதம் கழித்து கட்சி அறிவிப்பு

10 மாதம் கழித்து கட்சி அறிவிப்பு

இது தொடக்க கூட்டம் தான், இன்னும் 50 கூட்டங்களை இது போல நடத்த வேண்டும் என்றும் கூறினார். ரசிகர்களிடம் வாங்கும் பணத்திற்கு கணக்கு வைக்கவே செயலி தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். குழந்தை பிறக்க 10 மாதம் தேவைப்படும் என்றும் 10 மாதம் கழித்து கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பேன் என்றும் கமல் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal hassan today inauguration of the app on today.
Please Wait while comments are loading...