கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்

சென்னை: அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வரும் 21-ந் தேதியன்று அரசியல் கட்சியை தொடங்கி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் கமல்ஹாசன். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தமது அரசியல் பயணத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

இதையொட்டி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரை கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார். பின்னர் இன்று இரவு திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ், மக்கள் மீது அவர் கொண்ட அக்கறை ஆகியவற்றை கற்க ஆர்வமாக உள்ளேன். அரசியல் பயணம் தொடங்குவதால் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றேன் என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!