படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை- மார்கழி இசை விழாவுக்கான யுனெஸ்கோ அங்கீகாரம்: கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை நகரத்தை யுனெஸ்கோ அமைப்பு இணைத்துள்ளது என்பது மார்கழி இசை விழாக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பரிய இசைக்கு பங்களித்து வருவதன் அடிப்படையில் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்துள்ளது யுனெஸ்கோ. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

kamal haasan

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த @unesco அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும்.

இந்தியப் பிரதமர் சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை. தேய்த்தாலும் தேயாது தெற்கு.

இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

படைப்பாக்க நகரமாக சென்னை தேர்வு என்பது மார்கழி இசை விழாவுக்கான யுனெஸ்கோ அங்கீகாரம் என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

படைப்பாக்க நகரமாக சென்னை தேர்வு என்பது மார்கழி இசை விழாவுக்கான யுனெஸ்கோ அங்கீகாரம் என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal Haasan tweeted on Chennai inclusion in UNESCO’s Creative Cities list.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற