Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலை இப்படியே விட்டுவிடக் கூடாது.. தேவை வரும் போது கோட்டை நோக்கி புறப்படுவோம்: நடிகர் கமல்ஹாசன்

இந்த அரசியலை இப்படியே விட்டுவிட கூடாது; தேவை வரும் போது கோட்டை நோக்கி புறப்படுவோம் என நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாக பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: இந்த அரசியலை இப்படியே விட்டுவிடக் கூடாது; தேவை வரும்போது கோட்டை நோக்கி புறப்படுவோம் என நடிகர் கமல்ஹாசன் ஆவேசமுடன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்தும் தற்போதைய அதிமுக ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். ட்விட்டரில் திடீர் திடீரென கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் கமல்ஹாசன். அவர் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சந்தடி சாக்கில் அதிமுகவை விமர்சித்து வருகிறார்.

அதிமுக மீது விமர்சனம்

அதிமுக மீது விமர்சனம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் கமல்ஹாசன். அவர் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சந்தடி சாக்கில் அதிமுகவை விமர்சித்து வருகிறார்.

ஆரம்ப விழா

ஆரம்ப விழா

இந்நிலையில் கோவை ஈச்சனாரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: இதை திருமண விழாவாக பார்க்கவில்லை. இதனை ஆரம்ப விழாவாக கருதுகிறேன்.

திருடர்களை அனுமதித்தோம்

திருடர்களை அனுமதித்தோம்

ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்து விட்டோம். அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது. அரசியல் சூழலை இப்படியே விட்டுவைக்காமல் அதனை மாற்ற வேண்டியது நம் கடமை.

சமூகத்தின் மீது கோபம்

சமூகத்தின் மீது கோபம்

இந்த சமூகத்தின் மீதான கோபம் எனக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தலைமையேற்க எனக்கு தைரியம் வந்துவிட்டதா என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு தைரியம் வந்துவிட்டதா?

தேவைப்பட்டால் கோட்டை நோக்கி..

தேவைப்பட்டால் கோட்டை நோக்கி..

நாம் நமது வேலையை செய்வோம். தேவைப்பட்டால் கோட்டையை நோக்கி புறப்படுவோம். தொடர்ந்து போராடுங்கள். தொடர்ந்து கேள்வி கேளுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

சுத்தமாக வைப்போம்...

சுத்தமாக வைப்போம்...

தமிழகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுங்கள். சொத்து சேர்த்தால் மட்டும் போதாது; அதை மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+