பஸ்களை இயங்க வைத்தால் போதும்... அதுவே பொங்கலுக்கு அரசு தரும் விலைமதிப்பில்லா பரிசு... கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  போராட்டத்தில் ஈடுபடுவர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - அமைச்சர் விஜய பாஸ்கர்- வீடியோ

  சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நடிகர் கமல் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவீதம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Kamal hassan asks TN government to talk with transport workers

  தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த ஸ்டிரைக்கினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும் என்று டுவிட்டரில் கமல் பதிவிட்டுள்ளார்.

  கமல் சில மாதங்களாக அரசியல் குறித்து தனது கருத்துகளை டுவிட்டரில் முன்வைத்து வந்திருந்தார். கடந்த சில நாட்களாக அவர் டுவிட்டர் பக்கத்தில் எந்த கருத்துகளையும் பதிவிடவில்லை.

  ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நன்றி தெரிவித்து டுவீட்டியிருந்தார். இவரது டுவீட்டுகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தன. குறிப்பாக ஆளும் கட்சியினரின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் அளவுக்கு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  As the transport workers are indulging in strike throughout TN, Kamalhassan urges TN government to conduct talks with transport workers before Pongal festival.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற