For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரங்கணி தீவிபத்து: தமிழக அரசை பாராட்டிய கமல்ஹாசன்

குரங்கணி தீவிபத்து மீட்பு பணிகளில் தமிழக அரசின் செயல்பாட்டை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    குரங்கணி தீ, ரஜினி பற்றிய கமலின் பேட்டி-வீடியோ

    கோவை: தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட்ட தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    குரங்கணி மலைபகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் பலியாகிவிட்டனர்.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.

    தமிழக அரசுக்கு கமல் பாராட்டு

    தமிழக அரசுக்கு கமல் பாராட்டு

    குரங்கணி விபத்து குறித்து கமல் கோவையில் கூறுகையில் , தீ விபத்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா நேரங்களிலும் அரசை விமர்சிக்கக் கூடாது என்றார் கமல்.

    முதல் பாராட்டு

    முதல் பாராட்டு

    தமிழக அரசின் செயல்பாடுகளை முதல் முறையாக கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இதற்கு முன்னர் நீட் தேர்வு, டெங்கு, சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    கமல் விமர்சனம்

    கமல் விமர்சனம்

    சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் எடப்பாடியை நேரடியாக தாக்கி பேசியே டுவீட் போட்டவர் கமல். தமிழக அரசுடன் எப்போதும் மோதல் போக்கையே கொண்டிருந்தார்.

    நல்லதுதான்

    நல்லதுதான்

    தட்டிக் கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டி கொடுக்க வேண்டும், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்ட வேண்டும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்க வேண்டும் என்று சொலவடை உள்ளது. அதற்கேற்ப கமலும் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டியுள்ளார்.

    English summary
    Kamalhassan says that he expresses his wish to TN government for rescue operations done in Kurangani Forest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X