For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் மகள்களை பள்ளியில் சேர்த்தபோது ஜாதி, மதத்தை சொல்ல மறுத்தேன்.. கமல்

Google Oneindia Tamil News

சென்னை: என் மகள்களை பள்ளியில் சேர்த்தபோது ஜாதி, மதத்தை நான் விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை. இது தலைமுறை தலைமுறையாக தொடர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Kamals comment on Caste and Religion

#AskKamalHaasan என்ற ஹேஷ்டேகுடன் கமல்ஹாசன் தனது ரசிகர்கள், கட்சியினர், பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு டிவிட்டரில் பதிலளித்தார். அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குத்தான் மேற்கண்டவாறு கமல்ஹாசன் பதிலளித்திருந்தார்.

நான்சி என்பவர் கேட்ட கேள்வி இது: அடுத்த தலைமுறைக்கு ஜாதியை நீங்கள் எப்படி எடுத்துச் சொல்லப் போகிறீர்கள்? பள்ளி கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் அது கட்டாயம் இருக்குமா? உங்களது கருத்து என்ன என்று கேட்டிருந்தார்.

அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்: எனது இரு மகள்களையும் பள்ளியில் சேர்த்தபோது விண்ணப்பத்தில் ஜாதி, மதத்தை குறிப்பிட நான் மறுத்து விட்டேன். இது அப்படியே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் போகும். அதுதான் ஜாதி, மதத்தை ஒழிக்க ஒரே வழி. இதை ஒவ்வொரு தனி மனிதரும் செய்ய வேண்டும். இதை கேரளா அமல்படுத்த ஆரம்பித்து விட்டது. அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்று கமல் கூறியுள்ளார்.

English summary
MNM leader Kamal Haasan has commented on caste and Religion. He has said that, I refused to fill in the caste & religion column in both my daughters’ school admission certificate.That’s the only way,it will pass on to the next generation, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X