கமலின் மையத்துக்கு வட சென்னையிலிருந்து ஒரு "விசில்" #MaiamWhistle

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமல் அறிமுகப்படுத்திய 3 ஆப்கள்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்காக தொடங்கிய மையம் விசில் செயலிக்கு, அடிப்படை வசதிகளை கோரி வடசென்னையிலிருந்து ஒரு புகார் வந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுவதாகவும், அதனால் பலத்த மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் பெரு வெள்ளம் ஏற்பட்டால் வடசென்னைக்கு ஆபத்து என்று தனது டுவிட்டரில் பதிவு செய்தார்.

வெறும் டுவிட்டரில் மட்டுமே மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வந்த கமல், எண்ணூர் கழிமுகத்திற்கு நேரில் சென்றும் ஆய்வு செய்தார். அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்

இதைத் தொடர்ந்து திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி கொசஸ்தலை ஆற்றில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வல்லூர் அனல் மின் நிலையம் கட்டிய சாலையை அகற்ற நடவடிக்கையையும் ஆட்சியர் எடுத்தார்.

 கட்சி குறித்த அறிவிப்பு

கட்சி குறித்த அறிவிப்பு

இந்நிலையில் அவரது பிறந்தநாளான கடந்த 7-ஆம் தேதி அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து 3 ஆப்களை (செயலிகள்) அவர் அறிமுகப்படுத்தினார்.

 பொதுமக்கள் பிரச்சினை

பொதுமக்கள் பிரச்சினை

மையம்விசில் என்ற ஆப்பில் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து பேசலாம் எனறும் ஒரு வேளை தான் அரசியலில் ஏதேனும் பொறுப்பு வகித்து அதில் தவறுகள் நடைபெற்றாலும் மக்கள் விசில் அடிக்கலாம் என்றும் கமல் தெரிவித்தார். இந்நிலையில் அந்த செயலிக்கு ஒரு புகார் வந்துள்ளது.

வடசென்னையிலிருந்து புகார்

வல்லூரையும் வடசென்னை அனல் மின்நிலையத்தையும் இணைக்கும் அத்திப்பட்டு சாலை மிகவும் மோசமான நிலையில் மண் அரிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் நகல் மையம் விசிலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த பிரச்சினைக்கு முடிவு காண தாங்கள் தலையிட வேண்டும் என்று கமலுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal hassan started Maiam Whistle on his birthday. This is an app which is only for finding solution to people's complaint. It has got a complaint from North Chennai.
Please Wait while comments are loading...