தமிழன் தலையில் குல்லா.. அதிமுக இணைப்பு குறித்து கமல் ஆவேசம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அதிமுக இணைப்பு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ட்வீட் ஒன்றை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா என்று பதிவிட்டுள்ளார் கமல்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில் இப்படி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கமல். கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியல் நிகழ்வுகள் பற்றி டுவிட்டரில் விமர்சித்து பதிவிட்டு வருகிறார் நடிகர் கமல்.

கோமாளிக் குல்லா

கமல்ஹாசனின் டிவீட்டுகளுக்கு அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழன் தலையில் கோமாளிக்குல்லா என்று பதிவிட்டுள்ளார் கமல்.

தொடர் தாக்குதல்

கமல் ஹாசன் இதற்கு முன்பு வெளியிட்ட ஒரு டிவீட்டில் தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது இலக்கு. திமுக, அதிமுக, பிற கட்சிகள் மக்களுக்கு உதவும் கருவிகள். தவறினால் மற்ற கருவிகளை நாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

எடப்பாடியார் ராஜினாமா செய்ய வேண்டும்

இன்னொரு டிவீட்டில், ஊழல் நடந்தால், விபத்து நடந்தால் மற்ற மாநில முதல்வர்கள் பதவி விலகுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் தமிழக முதல்வர் விலக வேண்டும் என்று ஏன் யாருமே சொல்லவில்லை என்று கேட்டிருந்தார் கமல்.

சாவுக்குப் பயந்தவன் அல்ல நான்

கமலின் இன்னொரு டிவீட்டில், ஊழலுக்கு எதிரானவன் நான். எந்தக் கட்சிக்கும் எதிரானவன் அல்ல. புரட்சியாளர்கள் மரணத்திற்கு அஞ்சுவதில்லை என்று கூறியிருந்தார்.

இதுதான் தொடக்கம்

கமல்ஹாசனின் அரசியல் சாட்டையடி இந்த டிவீட்டிலிருந்துதான் விஸ்வரூபம் எடுத்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor-filmmaker Kamal Haasan set his Twitter followers and others wracking their minds with a Tamil poem current political situation.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற