For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளைஞரணி தலைவர் பதவி கேட்டு ஒருவழியாக தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரான கனிமொழி!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதியின் இளைய மகளான கனிமொழி இலக்கியவாதியாக மட்டுமே இருந்து வந்தார். பின்னர் அவர் தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டு அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டார்.

Kanimozhi got DMK’s women’s wing secretary !

இருப்பினும் தி.மு.க. கட்சி அமைப்பில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது. இதனால் தமக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பதவியை கேட்டு வந்தார் கனிமொழி.

ஆனால் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் இந்த கோரிக்கையை நிராகரித்தனர். கனிமொழிக்கு மகளிர் அணி பொறுப்பைக் கொடுக்கலாம் என்று ஸ்டாலின் ஆலோசனை கூறிவந்தார்.

கனிமொழியோ இளைஞர் அணி அல்லது மாணவர் அணி வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இதனையும் ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் கனிமொழி, மாநில மகளிர் அணிச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் தி.மு.க. தலைமை நிலைய பதவியை முதல் முறையாக கனிமொழி பெற்றுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi daughter and Rajyasabha MP Kanimozhi finally got party's women’s wing secretary post on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X