For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏவுகணையின் தந்தை கலாம் முதலாமாண்டு நினைவு அஞ்சலி.. உறுதிமொழி எடுத்த மாணவர்கள்!

Google Oneindia Tamil News

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் டாக்டர். அப்துல் கலாம் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாணவர்கள் வகுப்பு வாரியாக ஏவுகணையின் தந்தை அப்துல்கலாம் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

Karaikudi school studens observe Kalam's first death anniversary

இந்நாளில் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் மணவர்களுக்கு கலாம் அவர்களின் சாதனைகள், 2020ல் இந்தியா வல்லரசாகும் என்று சொன்ன அவரின் கனவுகள், இளைஞர்களின் முன்னிலையில் அவரின் எழுச்சி உரைகள் பற்றி கூறினார்.

Karaikudi school studens observe Kalam's first death anniversary

மாணவர்கள் அப்துல் கலாம் அவர்களின் கவிதைகளை வாசித்து அவரின் கனவுகள் மெய்ப்பட உறுதிமொழி ஏற்றனர். அவர் வாழ்நாளில் கடைப்பிடித்த உயிர்களிடத்தில் அன்பு, பதவியில் பணிவு, அடக்கம் ஆகிய நற்பண்புகளை மாணவர்கள் தங்கள் வாழ்கையில் மையமாகக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள் எடுத்துக் கூறினர்.

Karaikudi school studens observe Kalam's first death anniversary

போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டென்ட் கருவி ஆகிய அவர் கண்டுபிடிப்புகளையும், அணுகுண்டு சோதனை நடத்தி, இந்தியாவை வல்லரசாக பார்க்க வாய்த்த தகவல்களை கூறி மாணவர்களின் அறிவியல் ஆர்வம் தூண்டப்பட்டது.

Karaikudi school studens observe Kalam's first death anniversary

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் சித்ரா செய்திருந்தார்.

English summary
Karaikudi Rmanathan chettiyar municipal high school students observed Dr Abdul Kalam's first death anniversary today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X