"அலங்கோலம்" பெங்களூர் சிறையில்தான்.. ஆனால் புள்ளி வச்சது தமிழகத்திலாம்.. கொந்தளிக்கும் கர்நாடகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க காரணமே தமிழக புள்ளிதான் கொந்தளிப்பில் இருக்கிறதாம் கர்நாடகா என அம்மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா சிறை விவகாரம் தொடர்பாக, டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் புகார் வாசித்துள்ளனர் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள். குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலா தரப்பிடம் ஆதரவு கேட்காமல், ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸிடம் ஆதரவு கேட்டார் நமது வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி. இந்தளவுக்குத்தான் சசிகலா தரப்பின் பலம் உள்ளது.

இதை உணராமல் சிறையில் வசதிகள் செய்து கொடுத்தது நாம் செய்த தவறு. இதற்குக் காரணமே தமிழகப் புள்ளிதான் என அவர்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து...

தமிழகத்தில் இருந்து...

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய புள்ளி மூலமாகத்தான் சசிகலாவுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த காலத்தில், ராகுல் காந்தியை வரவழைத்து பா.ஜ.கவுக்கு செக் வைத்தார் நடராசன்.

டெல்லிக்கு வேண்டுகோள்

டெல்லிக்கு வேண்டுகோள்

இந்த திடீர் வருகைக்குப் பின்புலத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் இருந்தார். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, சிறையில் சசிகலாவுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தருமாறு டெல்லி மேலிடத்துக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திர பறவை சசி

சுதந்திர பறவை சசி

அவர்களும் கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசியுள்ளனர். இதன்பின்னர், கார்டனில் வலம் வந்ததைப் போல சிறையிலும் வலம் வந்தார் சசிகலா.

பாஜகதான் காரணமா?

பாஜகதான் காரணமா?

இப்போது அதிகாரி ரூபா மூலம் விவகாரம் வெளியில் கசிந்ததை கர்நாடக அரசு ரசிக்கவில்லை. இதன்பின்னணில் பா.ஜ.கவின் தூண்டுதல் இருப்பதாகவும் சந்தேகிக்கின்றனர்.

இன்னொரு சீனியர்

இன்னொரு சீனியர்

இது சட்டசபை தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கர்நாடக காங்கிரசார் அச்சப்படுகின்றனர். அவர்களுடன் பேசிய தமிழக காங்கிரஸின் இன்னொரு மூத்த தலைவர், நான் தொடக்கத்தில் இருந்தே பேசி சொல்கிறேன்... அந்தக் குடும்பத்துக்கு உதவி செய்வதன் மூலம் நமக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.

இமேஜ் பாதிப்பு

இமேஜ் பாதிப்பு

மக்கள் மத்தியில் தேவையற்ற கெட்ட பெயர்தான் ஏற்படும். அவர், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் போல செயல்பட்டார். ஆளும்கட்சி மீதான எதிர்ப்பை அவர் வலுவாகப் பதிவு செய்யவில்லை. இப்போது அந்தம்மாவுக்கு செய்த உதவிகளால், நம்முடைய இமேஜ்தான் பாதிக்கப்பட்டுள்ளது.

Pon RadhaKrishnan Speech About Sasikala-Oneindia Tamil
இப்பதான் தெரியுது

இப்பதான் தெரியுது

கர்நாடகவாழ் தமிழர்கள் மத்தியிலும் அந்நியப்பட்டு நிற்கிறோம். தமிழக காங்கிரஸ் புள்ளியின் தவறான வழிகாட்டுதலால், கர்நாடக மக்கள் மத்தியில் கெட்ட பெயரை சுமந்து கொண்டு நிற்கிறோம். இதை மிகத் தாமதமாகத்தான் உணர்ந்துள்ளது டெல்லி எனக் கொதிப்போடு பேசியிருக்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka congress leaders was very disappointed on Tamilnadu senior leader over the Sasikala Jail episode.
Please Wait while comments are loading...