For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி மிட்டாய்

By Super
Google Oneindia Tamil News

தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மிட்டாய் வகைகளில் கருப்பட்டி மிட்டாயும் ஒன்று. கருப்பட்டி மிட்டாய் சீனி மிட்டாய்யாக மாறி இன்று கிட்ட தட்ட அதுவும் இல்லாமலே போய் கொண்டிருக்கிறது தமிழகத்தில். தென் மாவட்டங்களில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளில் அதிகமாக இந்த கருப்பட்டி மிட்டாய் விற்கப்படுகிறது. திருநெல்வேலி என்றால் அனைவருக்கும் அல்வாதான் நினைவுக்கு வரும், ஆனால் அதே போல் கருப்பட்டி மிட்டாயும் இங்கு பிரபலம் என்பது பலர் இன்னும் அறியாமலே உள்ளார்கள்.

ஓலைக்கொட்டானில் கருப்பட்டி மிட்டாய்!

Karrupatti Mittai | Buy best ground chikki online!

கருப்பட்டி மிட்டாயை நினைக்கும் பொழுதே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். மனதிற்கு இனிமையும், ஒரு உற்சாகத்தையும் கொடுக்க கூடியது இந்த கருப்பட்டி மிட்டாய். பண்டிகை காலங்களில் தென் மாவட்டங்களில் மிக அதிகமாக விற்பனை ஆகும் மிட்டாயில் இதுவும் ஒன்று. இந்த கருப்பட்டி மிட்டாய் வாங்குபவர்களுக்கு அது ஓலை கொட்டான்களில் தான் அந்த காலத்தில் கொடுத்து வந்தார்கள். இன்றளவும் விருதுநகரில் சில கடைகளில் இந்த கருப்பட்டி மிட்டாய் ஓலை கொட்டான்களிலே கொடுக்கிறார்கள். ஓலை கொட்டானில் உள்ள மிட்டாய் அதிக நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும் என்பதாலும் சுற்று சூழலை பாதுகாக்கும் என்பதாலும் ஒலைக்கொட்டான் பயன்படுத்தப்படுகிறது.

சீனி மிட்டாயை விட ஏன் கருப்பட்டி மிட்டாய் சிறந்தது.

சீனி (சர்க்கரை) மிட்டாய் என்பது முழுவதும் சீனியிலே தயார் செய்வது. சீனியை உண்பதால் உடலுக்கு பல தீங்கு விளைவிக்கும் என்பது பலரும் அறிந்ததே. அதனால் சர்க்கரைக்கு பதிலாக, ஆரோக்கியத்தை வழங்கும் கருப்பட்டி சேர்த்து கருப்பட்டி மிட்டாய் செய்தால், உடலுக்கு எவ்வித அபாயமும் ஏற்படாது. உடலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கருப்பட்டி மிட்டாய் வீட்டில் எப்படி செய்வது:

தேவையான பொருள்கள்:

இட்லி அரிசி - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

எண்ணெய் - தேவையான அளவு

கருப்பட்டி - 2 கப்

செய்முறை:

முதலில் இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி, பின் நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதிலுள்ள நீரை முற்றிலும் நீக்கி விட்டு, அதை நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவை சேர்த்து 1/2 அல்லது 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கருப்பட்டியை எடுத்து கொண்டு நன்கு தட்டி, ஒரு வாணலியில் போட்டு தண்ணீர் ஊற்றி, கருப்பட்டியை நன்கு கரைய வைக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும், அதனை இறக்கி ஓரளவு குளிர்ந்ததும், வடிகட்டி மீண்டும் வாணலியில் ஊற்றி 6-8 நிமிடம் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.

Karrupatti Mittai | Buy best ground chikki online!

பிறகு அதில் தேவையான அளவு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும். பின் வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின்பு தனியாக ஊற வைத்துள்ள மாவை ஒரு கெட்டியான கவரில் சிறிது வைத்து, அந்த கவரில் முறுக்கு போன்று வரும் அளவில் ஓட்டை போட்டு, எண்ணெய் சூடானதும், அதில் வட்ட வட்டமாக பிழிந்து விட்டு, பொன்னிறமானதும், பொரித்து எடுத்து கருப்பட்டி பாகுவில் போட்டு 2 நிமிடம் முன்னும், 2 நிமிடம் பின்னும் திருப்பிப் போட்டு ஊற வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான ருசியான கருப்பட்டி மிட்டாய் ரெடி!!!

Karrupatti Mittai | Buy best ground chikki online!

இவ்வளவு ருசியான மிட்டாயை நாம் வீட்டில் செய்வது என்பது சற்று கடினமே காரணம் இயந்திர உலகத்தில் மனிதனும் இயந்திரம் போல 24 மணி நேரமும் ஓடி கொண்டிருக்க இதெயெல்லாம் செய்ய நேரம் இருக்குமா என்பதே மிக பெரிய ஆச்சர்யக்குறி, இருப்பினும் இது போன்ற பாரம்பரிய உணவு பொருள்கள், பிரசித்தி பெற்ற தின் பண்டங்களை ருசியாகவும் தரமாகவும் தயாரித்து ஆன்லைனில் விற்கிறது நேடிவ்கிருஷ்.காம் என்ற நிறுவனம். ஒரு கிளிக்கில் நீங்கள் ஆர்டர் செய்தாலே போதும் மிகச் சில நாட்களில் உங்கள் இல்லம் வந்து சேரும் பல ஊர்களின் பிரபலமான பிரசித்தி பெற்ற தின்பண்டங்களும் உணவு பொருள்களும். ஆர்டர் செய்யுங்கள் குடும்பத்தோடு ருசித்து கொண்டாடுங்கள்.

English summary
Karrupatti Mittai is traditional tamil name for groundnut chikki. Karrupatti Mittai is a delicacy that will leave you wanting for more. Now buy online!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X