For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

95-வது பிறந்த நாளைக் கொண்டாட தயாராகும் இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி

95-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் ஜூன் 3-ல் கொண்டாடுகிறார் கருணாநிதி.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதியின் முதல்வர் வாழ்க்கை- வீடியோ

    சென்னை: இந்திய நிலப்பரப்பில் இன்றைக்கு வாழும் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதி வரும் ஜூன் 3-ந் தேதி 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

    இந்திய அரசியலில் மிக மூத்த தலைவரான கருணாநிதி. நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார்.

    Karunanidhi 95th Birthday Celebration

    1930களிலேயே தம்முடைய மாணவர் பருவத்திலேயே இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போதைய நீதிக்கட்சி, பின்னர் திராவிடர் கழகம் என திராவிடர் இன விடுதலைக்கான பயணத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். தந்தை பெரியாரின் குடியரசு ஏட்டில் துணை ஆசிரியராக ஈரோட்டில் சிறிது காலமும் பணிபுரிந்தார் கருணாநிதி.

    1949-ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. அப்போது அண்ணா தலைமையிலான திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருணாநிதி உருவெடுத்தார்.

    1952ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதலாவது பொதுத் தேர்தலை திமுக புறக்கணித்தது.

    1956ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுகவின் 2-வது மாநில மாநாட்டில் தேர்தல்களில் பங்கேற்பது என திமுக முடிவெடுத்தது.

    1957ம் ஆண்டு முதல் 13 சட்டசபை தேர்தல்களில் கருணாநிதி போட்டியிட்டுள்ளார். இந்த 13 சட்டசபை தேர்தல்களிலுமே வென்று சாதனை படைத்தவர் கருணாநிதி.

    1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சாவூர், 1967, 71-ல் சைதாப்பேட்டை, 1977, 80-ல் அண்ணா நகர், 1989, 91-ல் துறைமுகம்; 1996, 2001, 2006 தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் கருணாநிதி. 2011, 16-ம் ஆண்டுகளில் திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    1967-ம் ம் ஆண்டு திமுக வென்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்த போது பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் கருணாநிதி. 1969-ல் அண்ணா மறைந்தபோது முதல் முறையாக முதல்வர் பதவியை ஏற்றார்.

    1971-76; 1989-91; 1996-2001; 2006-2011 என 5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்திருக்கிறார் கருணாநிதி.

    முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் கருணாநிதி. ஆனாலும் தமிழகம், இந்திய அளவிலான அரசியல் நிகழ்வுகள் பல முறை கருணாநிதி தீவிர அரசியலில் இல்லையே என மக்களை ஏங்க வைத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்

    English summary
    DMK Leader Kalaignar Karunanidhi 95th Birthday Celebration on June 3rd.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X