கருணாநிதி நல்ல உடல்நிலையில் இருக்கிறார்.. மருத்துவமனையில் இருந்து ஆ.ராசா பேட்டி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நலனுடன் இருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்துள்ளார்.
நேற்று இரவு முழுக்க திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

4 நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது. நேற்று இரவு அவரது உடலில் பிரச்சனை ஏற்பட்டு பின் குணமானது. இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அவர் உடல்நிலை தேறி உள்ளதாக அறிக்கை வெளியானது.
இந்தநிலையில் இரவு முழுக்க மருத்துவமனையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. இரவு முழுக்க அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கருணாநிதி நலமாக உள்ளார்.
தொடர்ந்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. நேற்று மாலையை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறார், என்றுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!