முழுமையாக மீண்டு வருகிறார்- ஈரோடு தமிழன்பனுக்கு புத்தகத்தில் ”முக” என கையெழுத்திட்டு தந்த கருணாநிதி
கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு நூல் ஒன்றில் முக என கையெழுத்திடும் அளவுக்கு கருணாநிதி உடல்நலம் தேறியுள்ளது.
Recommended Video

சென்னை: முதுமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி தற்போது முழுமையாக குணமடைந்து மீண்டு வருகிறார். அண்மையில் தம்மை சந்தித்த கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு அவர் தந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் முக என கையெழுத்திட்டு கருணாநிதி கொடுத்தனுப்பியது திமுக தொண்டர்களையும் அவரது ஆதரவாளர்களையும் பெரும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.
உடல்நலம் தேறிவரும் கருணாநிதியை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அண்மையில் இடதுசாரித் தலைவர்கள் நல்லகண்ணு, முத்தரசன் உள்ளிட்டோர் கருணாநிதியைச் சந்தித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போதைய உடல்நிலையிலும் தெளிவாக முக என கருணாநிதி கையெழுத்திட்டு கொடுத்திருக்க செய்தி திமுக தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழன்பனுடன் சந்திப்பு
மாகவிஞர் ஈரோடு தமிழன்பன், அண்மையில் கலைஞரை சந்திக்கச் சென்றார். கவிஞரைப் பார்த்ததுமே கலைஞர் தன் கையைஉயர்த்தி அவரை வரவேற்றார்.

முக என கையெழுத்து
கவிஞர்களின் காதலரான கலைஞரின் முகத்தில் வெளிச்சம் கூடியது. அவர் அருகே சென்று நலம் விசாரித்த கவிஞர், தான் எழுதிய ‘மாற்று மனிதம்' நூலை கலைஞரிடம் கொடுக்க, கலைஞரோ அதன் முதல் பக்கத்தைத் திறக்கசெய்து, தன் எழுதுகோலால் மு.க. என சுருக்கெழுத்தில் கையெழுத்திட்டார்.

தெளிவாக கையெழுத்து
நின்ற நிலையில் நீட்டப்பட்ட நூலிலேயே, கலைஞரால் இவ்வளவு தெளிவாகக் கையெழுத்து போட முடிகிறது என்றால், கலைஞரின் விரல்களை விட்டு, தமிழ் நழுவிவிடவில்லை என்று பொருள்.

வதந்திகள் உடைப்பு
இதனால் கொண்டுபோன நூலைக் கலைஞரிடம் கொடுக்காமலே, நினைவுப் பெட்டகமாய்த் திருப்பி எடுத்துவந்துவிட்டார் கவிஞர் ஈரோட்டார். கலைஞரின் நினைவாற்றல் முழுதும் போய்விட்டது. அவரால் அசையக் கூட முடியவில்லை என்றெல்லாம் பரப்பட்டு வரும் தகவல்களை உடைத்தெறிகிறது கலைஞரின் இந்தக் கையெழுத்து.
இவ்வாறு ஆரூர் தமிழ்நாடன் பதிவிட்டுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications