For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடைபெறுகிறார்.. கடைசி நொடியில் கண்ணீரில் கதறும் கருணாநிதி குடும்பத்தினர்.. மனதை உருக்கும் காட்சி

திமுக தலைவர் கருணாநிதி உடல் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா எடுத்து செல்லப்படுவதால், தற்போது கருணாநிதியின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கடைசி நொடியில் கண்ணீரில் கதறும் கருணாநிதி குடும்பத்தினர்...மனதை உருக்கும் காட்சி- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா எடுத்து செல்லப்படுவதால், தற்போது கருணாநிதியின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள்.

    தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை இயற்கை எய்தினார். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    Karunanidhi: Last Minute Cry, Emotional moruns outside the Rajaji Hall

    தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தற்போது நடந்து வருகிறது. காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தற்போது அவரது உடல் ராஜாஜி ஹாலில் இருந்து மெரினா நோக்கி கொண்டு செல்லப்படுகிறது.

    மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே தான் கருணாநிதியின் உடல் புதைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ராஜாஜி ஹால் அருகே சோகமான காட்சிகள் அரங்கேறி வருகிறது.

    Karunanidhi: Last Minute Cry, Emotional moruns outside the Rajaji Hall

    கருணாநிதியின் உறவினர்கள் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி எல்லோரும் மிகவும் சோகமாக கண்ணீர் விட்டபடி காட்சி அளிக்கிறார்கள். அதேபோல் டிஆர் பாலு, ஆ.ராசா ஆகியோர் மிகவும் மோசமாக கண்ணீர் விட்டபடி இருக்கிறார்கள்.

    அதேபோல் கருணாநிதி வைக்கப்பட்டு இருக்கும் கண்ணாடி பேழை தூக்கப்பட்ட போது, பெரிய அளவில் மக்கள் கோஷம் எழுப்பினர். திமுக உறுப்பினர்கள் கத்தி கூச்சலிட்டார்கள். இதனால் அங்கு மிகவும் கனமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    Karunanidhi: Last Minute Cry, Emotional moruns outside the Rajaji Hall.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X