For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவள்ளுவரே தமிழ்நாட்டில் திணறிப்போயிருக்கிறார் அதிமுக ஆட்சியில்... கலைஞர்

Google Oneindia Tamil News

Karunanidhi questions about jayalalitha speech in assembly
சென்னை: அதிமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும் அய்யன் வள்ளுவரே வாடிப் போயிருக்கும் போது,வறுமையில் வாடும் மக்களின் நிலைமை எப்படி உயரும் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கான பதில் உரையில் ஜெயலலிதா தெரிவித்திருந்த கருத்துகளை முன்வைத்து " பதில் உரையா?பழி உரையா" என்ற தலைப்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டசபையில் ஆளும் கட்சியினரின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்தால் அதனை அரசின் மீது சுமத்தப்படும் குற்றமாகவே கூறுவது முறையற்றது. ஜனநாயக நாட்டில் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க கூட உரிமையில்லாமல் போய்விட்டது.

ஆட்சியாளர்களைப் பற்றிய கருத்துகளை மற்றவர்கள் தெரிவிக்கும் போது அதில் உள்ள நிறைகுறைகளை பகுத்து அறிந்து பார்த்தால்தான் அது ஒரு நல்ல ஆட்சியாக அமைய முடியும். திருவள்ளுவரை உதாரணம் காட்டி முதல்வர் பேசியிருக்கிறாரே, அவருடைய ஆட்சியில்தான் திருவள்ளுவர் கோட்டம் சரியாக பராமரிப்பின்றி இருக்கிறது.

திருவள்ளுவர் பெயரிலான நூலகங்களும் மூடப்பட்டன. இதனையும் அவர் மனதில் கொள்ள வேண்டும். தமிழக ஆட்சியில் இலவசங்களை கொடுத்து ஏமாற்றுவதில்லை என்று கூறிய ஜெயலலிதாவே தற்போது இலவசங்களை வழங்கிக்கொண்டிருக்கிறார்.

இவருடைய ஆட்சியில் வேளாண்மை முதல் விண்வெளி வரை எல்லா துறைகளும் பெரும் அளவில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளன.

இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi arises questions Chief Minister Jjayalalitha's assembly speech. He said that in statement, Ayyan Thiruvalluvar also suffered more and more. then how the normal people are getting good life and shelter in Jaya's govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X