பொங்கலை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி!

Written By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி திமுக தொண்டர்களை அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று சந்தித்தார்.

பொங்கல் விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடியார் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

karunanidhi

முதுமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி இன்று கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார். கருணாநிதி சந்திக்கப் போகிறார் என்ற தகவல் பரவியதால் காலை முதலே கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.

கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீட்டின் முன்பகுதிக்கு வந்து தொண்டர்களுடன் பொங்கல் விழா வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார் கருணாநிதி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK President Karunanidhi today met party cadres at his Gopalapuram residence on the occasion of Thamizhar Thirunal Pongal.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற