For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டம்- ஒழுங்கை கட்டுப்படுத்துவார்கள் என நம்புகிறேன்- கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடியானதைத் தொடர்ந்து வெடித்துள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை பொறுப்பில் உள்ளவர்கள், அதைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என நம்புகிறேன், எதிர்பார்க்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

Karunanidhi urges ADMK govt to control the violence

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு விட்ட காரணத்தினால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்க்கெட்டுப் போய் கட்டுப்படுத்த முடியாமல் பிரச்சினைகள் நடத்திக்கொண்டிருக்கிறதே என்று கருணாநிதியிடம் கேட்டபோது,

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாமல் இருக்குமேயானால், அதைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், கட்டுப்படுத்துவார்கள்; அது அவர்களுடைய கடமை என்று பதிலளித்தார் கருணாநிதி.

அவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்களா? என்ற கேள்விக்கு, எதிர்பார்ப்பதில் தவறில்லை என்று அவர் தெரிவித்தார்.

English summary
DMK president Karunanidhi has asked the ADMK govt to control the violence after the bail rejection of Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X