
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி, கறுப்பு சட்டை அணிந்துள்ளார்.
கோபாலபுரம் இல்லத்தில் அவர் கறுப்பு சட்டையுடன் அமர்ந்துள்ள புகைப்படம் கருணாநிதியின் டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி மீட்பு பயணத்தில் உள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கறுப்பு சட்டை அணிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தமிழகம் முழுக்க காவிரி ஆதரவு போராட்டக்காரர்கள் கறுப்பு ஆடை அணிந்துள்ளனர். மோடிக்கு எதிராக கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கருணாநிதி கறுப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவிக்கும் போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. திமுகவினரின் போராட்டத்திற்கு இது உற்சாகம் கொடுத்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி அவர்களை கண்டித்து தலைவர் கலைஞர் அவர்கள் கருப்பு சட்டை அணிந்துள்ளார்.
இடம் : கோபாலபுரம். #Admin pic.twitter.com/9Bde57CFNl— KalaignarKarunanidhi (@kalaignar89) April 12, 2018
இதனிடையே, திருவிடந்தையில் பிரதமர் மோடி, ராணுவ சாகச கண்காட்சிகளை பார்வையிட்டார். சமீபத்தில் கருணாநிதியை அவரது இல்லத்தில், பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில், காவிரிக்காக கருணாநிதியும், மோடியை தமிழகத்தில் இருந்து திரும்பி போகச் சொல்லி களத்தில் குதித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!