கொலை வெறி பேச்சு... சிறையில் கருணாஸ்... ஜாமீன் கோரி மனு தாக்கல்
Recommended Video

சென்னை: காவல் துறை மற்றும் முதல்வருக்கு எதிராக மிரட்டும் தொனியில் பேசியதால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ கருணாஸ் சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாஸ் குறிப்பிட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் கை, காலை உடைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

மேலும் முதல்வரே தான் அடித்து விடுவேன் என்ற பயத்தில் இருப்பதாகவும் மிரட்டும் தொனியிலும் அவர் பேசியிருந்தார். இதையடுத்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்துக்கு விடுப்பு என்பதால் கருணாஸுக்கு இன்று ஜாமீன் கோர முடிவு செய்தனர்.
அதன்படி கருணாஸின் வழக்கறிஞர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதுபோல் கடலூர் சிறையில் உள்ள முக்குலத்தோர் புலிகள் படை நிர்வாகி செல்வநாயகமும் ஜாமீன் கோரியுள்ளார்.
இவர்களது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வரும் புதன்கிழமை வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications